கொழும்பு ஹைட்பார்க் சதுக்கத்தில் இடெம்பெற்ற கூட்டம் ஒன்றில் உறையாற்றியுள்ள பொது பலசேனாவின் ஞான சார தேரர் முஸ்லிம்கள் பொது வேட்பாளருக்கு வாக்களித்தால் 19815ல் இடெம்பெற்றது போன்ற ஒரு இனக்கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தால் அது தவரான வார்த்தைப்பிரயோகமாக கொள்ளப்படவேண்டியதாகும்.
இவ்வாரான வார்த்தைப்பிரயோகங்கள் முஸ்லிம்கள் மீது அப்பாவி சிங்கள மக்களை அரசியலின் பெயரால் தூண்டி விடுவதாக அமைந்து விடும். இலங்கை ஜனநாயக நாடு என்ற ரீதியில் இவ்வார்த்தைப்பிரயோகமானது பொதுவாக அடிப்படை உரிமை மீதான அடக்குமுறையாக அமைகின்றது. சிந்தணை செயற்பாட்டுச்சுதந்திரம் இலங்கை நாட்டின் அரசியல் ஏற்பாடாகும் என்பதனை பொதுபல சேனா போன்ற அமைப்புக்கள் விழங்கி கொள்ள வேண்டும்.
இவாரான எச்சரிக்கைகள், அச்சுருத்தல்கள் தொடர்ந்தும் முஸ்லிம் சமூகம் மீது திணிக்க முற்படுவதன் மூலம் இலங்கை முஸ்லிம் சமூகம் கோழைகளாக, கொத்தடிமைகளாக வாழ வேண்டும் என்ற கனவினை கான்பது ஏற்க முடியாததாகும். இலங்கை முஸ்லிம்களைப்பொருத்தவரை இலங்கை எமது தாய்நாடு என்பதனை மீண்டும் வழியுருத்திக்கூறிக்கொள்ள முனைகின்றோம். எவ்வாறு சிங்கள தமிழ் சமூகங்களும் இந்த நாட்டின் சொந்தக்காரர்களோ அவ்வாரான உரித்துடையவர்களே முஸ்லிம்கலுமாவர். அத்தோடு முஸ்லிம் சமூகம் இவ்வுலக வாழ்க்கையோடு தமது வாழ்க்கை முடிந்துவிடும் என்ற நம்பிக்கை கொண்டவர்களல்ல.
மரணம் ஒருமுரையென்றாலும் பிறப்பு இரன்டு முறை என்பதனை ஆணித்தரமான நம்பிக்கையாக கொண்டவர்கள். இவ்வுலகம் ஒரு வாகனத்தரிப்பிடமாக ஏற்றுள்ளவர்கள். எனவே தொடர்ந்தும் தமது அரசியல் இலாபங்கலுக்காக அப்பாவி சமூகங்களை காவு கொள்ள கனவு கான்பது ஆரோக்கியமானதாக அமையாது என்பதனை உலக வரலாறுகள் எடுத்துக்காட்டிக்கொண்டிருக்கின்றன.
அரசியலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் வாக்களிக்கக் கூடாது என்பதனை மக்கள் தீர்மானித்துக்கொள்வர். தற்போதய மேதகு ஜனாதிபதி அவர்கள் இம்முஸ்லிம் சமூகத்திற்கு செய்த விடயங்கள், எதிரணியினர் எமது முஸ்லிம் சமூகத்திற்கு செய்த விடயங்கள் எனபன மிகத்தெளிவானவையாக முஸ்லிம்களது மனங்களில் இருக்கும் இருக்கவும் வேண்டும்.
முஸ்லிம்கள் எப்பொழுதும் விசுவாசமாக வாழவேண்டும் என்ற கோட்பாட்டில் வாழ்பவர்கள். அரசியல்வாதிகள் உங்களது விஞ்ஞாபனங்களை தெளிவு படுத்துங்கள். துரவிகலாக இலங்கை சமூகத்தை ஐக்கியமான, சமாதானமான சூழலை நோக்கி மக்களை வழிநடாத்த வேண்டிய நீங்கள் ஆடம்பர வசதி வாய்ப்புக்களுக்காக அழிவுப்பாதையில் இட்டுச்செல்ல முனைவது இந்நாட்டுக்கும் அப்பாவி சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் மிதவாத பௌத்த தர்மத்திற்கும் செய்யும் துரோக நடவடிக்கையாகும். அவ்வாரனர்கள் காலம் வரும் போது தமது கீழ்த்தரமான நடவடிக்கைகளுக்கு விலை கொடுக்க வேண்டிவரும்.

0 comments :
Post a Comment