வெல்லுகின்ற பக்கம் நிற்கவேண்டும் என்பதனை விட மக்கள் சொல்லுகின்ற பக்கம் நிற்பதே சாலச்சிறந்தது!

முஹம்மது றினாஸ்-

னாதிபதித் தேர்தல் அறிவித்த நிலையில் தேர்தலின் இரண்டு பிரதான வேட்பாளர்களாக அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் எதிர்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு பல்வேறு கட்சிகளின் ஆதரவுகளை அறிவித்துள்ளன. 

இந்நிலையில் இலங்கையின் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இதுவரை தாங்கள் யாருக்கு ஆதரவு என்பதை அறிவிக்கவில்லை. 

இந்த இருகட்சிகளையும் எடுத்துக் கொண்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போதுள்ள அரசாங்கத்திற்கு எதிராகவே பாராளுமன்றத்தில் செயற்பட்டு வருகின்றமை இங்கு கவனிக்கத்தக்கது. இந்நிலையில் இக்கட்சி எச்சூழ்நிலையிலும் இந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்க வாய்ப்பில்லை என்றே கருதலாம்.

ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடு வித்தியாசமானது. ஏனெனில் அது அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி. அதன் தலைவர், கட்சியின் தவிசாளர் இருவரும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், அதே போன்று கிழக்கு மாகாண சபையின் ஆட்சியின் முக்கிய பங்குதாரர்கள். இப்படி இருக்க இவர்கள் எப்படி அரசுக்கு எதிரான தீர்மானம் ஒன்றை எடுப்பார்கள் என்பது கேள்வியே? 

இருந்த போதிலும் தேர்தல் என்று வந்து விட்டால் முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடு மாற்றமடைவதை நாம் பல்வேறு தேர்தலில் அவதானித்ததுண்டு. இவர்கள் மக்களிடம் வாக்கு கேட்பதற்கு பயன்படுத்துகின்ற மிகப்பெரிய ஆயுதம் அரசாங்கத்தினை விமர்சிப்பது. அதுவும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை விமர்சிப்பது என்பது இன்று நேற்றைய ஒன்றல்ல. 

அரசாங்கத்தில் இருந்த சந்தர்பங்களிலும் அரசாங்கத்திற்கு எதிராகவே வாக்களிக்க சொன்ன முஸ்லிம் காங்கிரஸ் இந்த தேர்தலில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முஸ்லிம் மக்களை எவ்வாறு சொல்லப் போகின்றது. சொன்னாலும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்வார்களா? 

பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டமை, முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட(படுகின்ற) பல்வேறு இனவாத வன்முறைகளுக்கு எதிராக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவுமே எடுக்காமல் கைகட்டி பார்த்துக் கொண்டிருந்த இந்த அரசின்மீது பாரிய அதிருப்தியில் இருந்த பெரும்பாலான முஸ்லிம் மக்கள் இந்த அரசாங்கத்தை வீழ்த்த சரியான தருணம் ஒன்றை காத்திருந்த சூழ்நிலையில் மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்குமாறு முஸ்லிம் காங்கிரஸ் கோரினாலும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே யதார்த்தமாகும். 

தொடர்ந்தும் பிழையான முறையில் மக்களை வழிநடத்திச் செல்ல முற்படுகின்ற போது மக்கள் தங்களது தீர்ப்பினை வாக்கு என்னும் ஆயுதத்தால் வழங்கவும் தயங்க மாட்டார்கள் ஆயினும் யதார்த்தத்தை உணர்ந்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயட்படுகின்ற போது கடந்தகால தவறுகளை மக்கள் மன்னிக்கவும் செய்வார்கள். 

வெல்லுகின்ற பக்கம் நிற்கவேண்டும் என்பதனை விட மக்கள் சொல்லுகின்ற பக்கம் நிற்பதே சாலச்சிறந்ததாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :