ஹூனைஸ் பாருக் வாகனத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் சற்றுமுன் தாக்குதல்-படங்கள்

எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக கூறி அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்ட வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக்கின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பொரளை - கொட்டா வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

எது எவ்வாறு இருப்பினும் இது குறித்து பொலிஸாரிடம் வினவியபோது, 

பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை வௌியே எடுத்த போது, அயல் வீட்டாரின் சைக்கிளில் அது மோதியதாக அவர்கள் குறிப்பிட்டனர். 

இந்த பிரச்சினை காரணமாக அங்கு முரண்பாடு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. அத்துடன் இது குறித்த மேலதிக விசாரணைகளுக்காக பொரளை பொலிஸார் ஹூனைஸ் பாரூக்கின் வீட்டிற்கு தற்போது சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் இது குறித்து தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், இச் சம்பவத்துடன் தேர்தல் வன்முறைகள் குறித்து 18 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் கொபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார். 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :