ஆளும்கட்சியைச் சேர்ந்த பலர் இரகசியமான முறையில், எதிரணிக்கு உதகின்றனர்-ராஜித சேனாரட்ன

ளும்கட்சியைச் சேர்ந்த பலர் இரகசியமான முறையில், எதிரணிக்கு உதவி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர், சிவில் மற்றும் வெகுசன அமைப்புக்கள் பல பொதுவேட்பாளருக்கு ஆதரவளித்து வருகின்றன. 

எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள விரும்பும் பலரை அரசாங்கம் பல்வேறு வரப்பிரசாதங்களை வழங்கி தக்க வைத்துக் கொள்ளும் பலவீனமான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

ஜனாதிபதி மஹிந்த தோற்க வேண்டுமென்ற நோக்கில் பலர் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். அண்மையில் கட்சி காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்று நடத்திய போது பாதுகாப்பு படையினர் புகுந்து இடையூறு விளைவித்தனர். கட்சிக் காரியாலயத்தை கடுமையாக சோதனையிட்டனர்.

நாட்டின் பாதுகாப்பு குறித்து திருப்தி அடைய முடியாது.சிறுவர் துஸ்பிரயோகம், படுகொலைகள், போதைப் பொருள் கடத்தல்கள் என குற்றச் செயல்களின் எண்ணிக்கை நீண்டு செல்கின்றது.

போதைப் பொருள் கடத்தல்காரர்கள், எதனோல் கடத்தல்காரர்களை கைது செய்யாத பாதுகாப்பு தரப்பு எமது கட்சிக் காரியாலயத்தை சோதனையிட தீவிரம் காட்டுகின்றது. ஆரம்பத்தில் எம்மை விமர்சனம் செய்த பலர் இன்று எம்முடன் இணைந்து கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :