சப்னி அஹமட்-
கடந்த 10 மணி நேரம் அட்டாளைச்சேனையில் இடைவிடாது பெய்த மழை காரணமாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகம், பொதுச்சந்தை, வங்கிகள், பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. அந்த வேளையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகச்செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ.கபூரின் காரியாலயம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
அதுபோன்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் இன்று வெள்ளத்தில் மூழ்கியிருந்த போதிலும் சகல உத்தியோகத்தர்களும் கடமைக்கு சமூகமளித்திருந்தனர்.
சில வீடுகளில் வெள்ளநீர் புகுந்தமையால் மக்கள் வெளியேறி குடும்பங்களின் வீடுகளில் வசித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய அசாதாரண நிலமைகளை நேரில் சென்று அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்சில், பிரதேச செயலக உதவிச் செயலாளர் ஏ.அதிசயராஜ், பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.எம்.உவைஸ், ஐ.எல்.நஸீர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
.jpg)
.jpg)

.jpg)
.jpg)






0 comments :
Post a Comment