மாணவர்களுக்கு எமது ஜனாதிபதியால் பல்வேறு வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளன-பிரதியமைச்சர் காதர்

இக்பால் அலி-

ம்முறை ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு எமது ஜனாதிபதியால்   பல்வேறு வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் சித்தியடைந்த மாணவர்கள் மொத்தம்  15000 ஆக தெரிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தவர்களின் தொகை 25000 ஆக  அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் மாதாந்தம் ரூபா 500 வாக வழங்கப்பட்டு வந்த சன்மானப் பணம்  ரூபா 1500 வாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ஜனாதிபதி கல்வி மேம்பாட்டுக்காக பாரிய  பங்களிப்பைச் செய்துள்ளார்கள்.

இதன் மூலம் அக்குரணை கோட்ட மட்டத்தில் ஐந்தாம் ஆண்டுப்  புலமைப் பரிசில் பரீட்சையில் 80 பேர் சித்தியடைந்;த மாணவர்கள் ஜனாதிபதி புதிய செயற்  திட்டத்தின் மூலமாக 118 ஆக அதிகரித்துள்ளது என்பது முக்கிய அம்சமாகும் என்று சுற்றாடல்  அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஏ, ஆர். எம். ஏ. காதர் தெரிவித்தார்.

அக்குரணை கோட்ட மட்டத்திலுள்ள பாடசாலைகளில் இம்முறை ஐந்தாம் ஆண்டு சித்தியடைந்த  மாணவர்களுக்கு கற்றல் உபகணரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கொணகல்ல சிங்கள மஹா  வித்தியாலத்தில் 06-12-2014 அன்று நடைபெற்றது. பிரதி அமைச்சரின் சொந்த நிதியின்  மூலம் கற்றல் உபகணரங்கள் வழங்கி வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்ட பிரதி அமைச்சர் ஏ.  ஆர். எம். ஏ. காதர் அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;

ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியினுடைய அதிக செல்வாக்கை கொண்டதாக  விளங்குகின்றன. இங்கு கூடுதலாக முஸ்லிம் வாக்காளர் உள்ளனர். இந்த முஸ்லிம்கள் எதிரணிக்கு  வாக்களிப்பதால் இப்பிரதேச மக்கள் எந்தவிதமான விமோசனத்தையும் பெறப் போவதில்லை. 

இந்நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களின் பாரியதொரு இனவாதக் கட்சிதான் எதிர்கட்சி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் கைகோர்;துள்ளது. அக்கட்சி எதிரணி வேட்பாளருடன் உடன்படிக்கை கைச்சாதிட்டுள்ளது.

இந்த பௌத்த இனவாதக் கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இருக்கும் வரை சிறுபான்மையினருக்கு எந்தவிதமான சலுகைகளையும் பங்களிப்புக்களையும் வழங்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. 

எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும் ஜனாபதித் தேர்தலில் வெற்றி பெறுவது மஹிந்த ராஜபக்ஷவே. இவருடைய வெற்றிக்கு நாமும் பங்காளியாக இருக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம். ஆர், எம். அம்ஜாத் மற்றும்  பாடசாலை அதிபர்கள். அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :