அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது என ஜனாதிபதி செயலகம் நேற்று வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பை ஆதாரம் காட்டி அரசாங்க ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. இருப்பினும் இந்த தகவல் தொடர்பில் தற்போது சில வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பில் தற்போது சவுதி அரேபியாவில் தங்கியுள்ள கட்சியின் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீனை சற்று நேரத்துக்கு முன்னர்

(இரவு 9.27) தொடர்பு கொண்டு நான் கேட்ட போது இவ்வாறு பதிலளித்தார்.
” ஜனாதிபதியைச் சந்தித்த போது 20 விடயங்கள் கொண்ட மகஜர் ஒன்றினைக் கையளித்தோம். அவைகள் அனைத்தையும் அரசாங்கம் நிறைவேற்றித் தர வேண்டும். இது தொடர்பில் எமது கட்சியின் செயலாளரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின செயலாளரும் கூட்டாக ஒப்பமிட வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாம் ஆதரிப்போம்.“ இவ்வாறு தெரிவித்தார்.

.jpg)
0 comments :
Post a Comment