கல்முனை யு.எல்.எம். றியாஸ்
அம்பாறை மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் ( 08.12.2014) தொடர் மழையை அடுத்து மாவட்டத்தின் கரையோரப்பிரதேசத்தின் தாழ் நிலப்பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இப்பிரதேசத்தில் உள்ள வீதிகள், மற்றும் குடியிருப்பு பிரதேசங்களும்
வெள்ளத்தில் மூழ்கியுள்ளது இதனால் மக்களின் அன்றாட நடவடிக்கைகள்
வெகுவாகப்பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது .
இதேவேளை கல்முனை பிரதேசத்தில் உள்ள பிரதான உள் வீதிகள் பல நீர் வழிந்தோட முடியாமல் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வீடுகளிலும் வெள்ளநீர் தேங்கி காணப்படுகின்றது. இதனால் போக்குவரத்துக்களும் தடைபட்டுள்ளது.
கல்முனை பிரதேசத்தில் உள்ள அலியார் வீதி,நகர மண்டப வீதி ,பழைய தபாலக வீதி உள்ளிட்ட உள்ளக பிரதான வீதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இன்று காலை 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தினுள் அம்பாறை
மாவட்டத்தில் ஆகக் கூடுதலான மலைவீழ்ச்சியாக அக்கறைப்பற்று பிரதேசத்தில் 169mm மழை பதிவாகியுள்ளதாக பொத்துவில் வளிமண்டலவியல் கடமை நேர பொறுப்பாளர் த. சதானந்தம் தெரிவித்தார்.
இதேவேளை முறையான வடிகான் வசதியின்மையே கல்முனைப் பிரதேசத்தில் சிறு மழைக்கும் வெள்ளம் எர்ற்படுவதர்கான காரணம் என இப்பிரதேச மக்கள் தமது ஆதங்கத்தை தெரிவித்தனர். இனியாவது இம்மக்களின் குறைகள் நிவர்திக்கப்படுமா? சம்மந்தப்பட்ட தரப்பினர் முன்வருவார்களா?
இறக்காமம் எஸ்.எம்.சன் சீர்-
அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று திங்கள் கிழமை கடும் மழை பெய்து வருகின்றது.
அடை மழை காரணமாக இறக்காமம் பிரதேசம் வரிப்பத்தான்சேனை , வாங்காமம் . குடிவில் , மாணிக்க மடுவு , தீக்கவாபி ஆகிய பகுதிகளிலுள்ள பல வீடுகளும் பாதைகளும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம். மழை காரணமாக மக்களின் போக்குவரத்து வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன அத்துடன் விவசாய தொழில் நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
நிந்தவூர் - முஹம்மட் ஜெலீல்-
தற்போது தொடர்ந்து பெய்துகொண்டிருக்கும் மழையினால் நிந்தவூர்- 5ம், பிரிவுக்குற்பட்ட பிரதேசங்களிலுள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதை படத்தில் காணலாம்.
இம் மழை தொடர்ந்து பேயுமாயின் இப்பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் நிலை மிகவும் பாதிப்புக்குள்ளாகிவிடும்.
இதுபோன்று கிழக்கில் சகல இடங்களிலும் மழை தொடர்ச்சியாக பேய்துவருவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதென்பதை சம்மத்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவும்.
அட்டாளைச்சேனை சப்னி
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)










0 comments :
Post a Comment