த.நவோஜ்-
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட கிராம அபிவிருத்திசங்க கட்டிடத் திறப்பு விழா நிகழ்வு புதன்கிழமை இடம் பெற்றது.
புதுக்குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் கே.ஜெகதீஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதியின் ஆலோசகரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், கௌரவ அதிதியாக வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ரீ.தினேஸ் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.வினுராஜ்,புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.எஸ்.முரசொலிமாறன், கிராம உத்தியோகத்தர் திருமதி.எஸ்.சாந்தி குமாரவேல், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஆர்.ரவீந்திரன், வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர் திருமதி.எஸ்.சுரேஸ்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.
.jpg)
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment