த.நவோஜ்-
ஒரு பிரதேசத்தில் பாடசாலைகள் மற்றும் வீதிகள் புதிதாக ஆரம்பிக்கப்படும் போது அப்பெயர்கள் பிரதேசத்தில் உள்ள முக்கியமானவர்களை கௌரவப்படுத்தும் நோக்கில் அவர்களது பெயர்களை தாங்கியதாக இருக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் ஓட்டமாவடி தாருல்உலூம் வித்தியாலயத்திற்கு வழங்கப்பட்ட தளபாட பொருட்களை கையளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை மாலை வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!
கல்குடா தொகுதி முஸ்லிம் பிரதேசத்தின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான மர்ஹீம் முகைதீன் அப்துல் காதரின் நினைவாக ஓட்டமாவடி பிரதேசத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தாருல்உலூம் வித்தியாலயத்தின் பெயர் முகைதீன் அப்துல் காதர் வித்தியாலயம் என்று பெயர் மாற்றப்பட வேண்டும் என்று பாடசாலை நிருவாகத்திடம் கோரிக்கையாக முன்வைக்கின்றேன்.
எதிர்காலத்தில் எமது பிரதேசத்தின் அபிவிருத்தியில் அக்கறையுடன் செயற்பட்டவர்கள் கௌரவிக்கப்படுவார்கள், அப்போதுதான் காலத்தால் அவர்களது சேவைகளும் பெயர்களும் அழியாமல் இருக்கும் என்றார்.
பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.ஜாபீர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.ரீ.அஸ்மி, ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.மீராசாஹிப், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலய அதிபர் ஏ.எல்.நெய்னா முஹம்மட் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment