அஷ்ரப் ஏ சமத்-
அமைச்சர் டக்லஸ் தேவாநாந்த இலங்கையில் உள்ள தமிழ் பத்திரகைகளின் ஆசிரியர்கள், மற்றும் தொலைக்காட்சி வானொலி தமிழ்ப் பிரிவு பணிப்பாளர்கள் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் கடமையாற்றும் தமிழ் ஊடகவியாளர்களை 30பேரை அழைத்து ஊடகவியலாளர் மாநாடொன்றை நாடத்தினார்.
இதில் இந்தியாவின் ஹந்து பத்திரிகையின் கொழும்பு நிருபர்களும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வு நேற்று 13ஆம் திகதி இரவு கொள்ளுப்பிட்டியில் உள்ள சன் கில் ஹோட்டலில் இராப்போசனம் வழங்கி இவ் மாநாடு நடைபெற்றது.
இவ் மாநாட்டில் அமைச்சருடன் பாராளுமன்றத்தின் குழுக்களின் தலைவர் முருகேசு சந்திரக்குமார், பாராளுமன்ற உறுப்பினர் சில்வஸ்டன் அலண், வடமாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் தவராஜாவும் மற்றும் அவரது கட்சி உறுப்பிணர்களும் கலந்து கொண்டு வடக்கு மாகாண அபிவிருத்தி, தற்போதைய வட மாகாண முதலமைச்சரின் செயற்பாடு, எதிர்காலத்தில் ஜனாதிபதி தேர்தலின்போது எமது கட்சியின் நிலைப்பாடு பற்றி கருத்துக்களை தெரிவித்தனர்.
அமைச்சர் டக்கலஸ் தேவாநாந்தா;
இங்கு வருகை தந்திருக்கின்ற தமிழ் பத்திரிகைகளின் ஜாம்பவான்களே – ரீ.என்.ஏ க்காரர்கள் அல்லது வட மாகண சபை முதலமைச்சர்கள் அல்லது பாராளுமன்றத்தில் ஏதாவது சொன்னால் உங்கள் பத்திரிகைகளில் கொட்டை எழுத்தில தலைப்புச் செய்தியில் பிரசுரிக்கின்றீர்கள். ஆனால் நாங்கள் சொல்லும் வடக்கு மக்களுக்கு செய்து காட்டும் அபிவிருத்திகளை கருத்துக்களையும் பிரசுரியுங்கள்.
இந்தியாவில் உள்ள தந்தி எனும் தொலைக்காட்சிக்கு நேற்று விக்கினேஸ்வரன் வடமாகணத்தில் பெண்கள் நடமாட முடியவில்லையாம். அங்கு இருக்கின்ற இரானுவம் தமிழ் பெண்களையெல்லாம் புடித்து பாலியல் துஸ்பிரயோகம் செய்கின்றார்களாம். 80ஆயிரம் விதவைகள் அங்கு உள்ளனராம் சிங்கள மக்களை அங்கு குடியேற்றுகின்றார்களாம்.
மாகணசபைக்கு அதிகாரம் ;இல்லையாம், நிதி இல்லையாம் எனச் சொல்லியிருக்கின்றார். இதனை நான் ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கின்றேன்.
இங்கு வருகைதந்துள்ள பத்திரிகையாளர்களே இது உண்மையா? நீங்களும் அங்கு பிறந்தவர்கள் அல்லது யாழ்ப்பாணத்திற்கு போணவர்கள் உண்மையை எழுதுங்கள்.
நான் அறிய நாவற்குழியில் பரம்பரையாக வாழ்ந்த 7 சிங்களக் குடும்பங்கள் மட்டுமே அங்கு மீள வந்துள்ளன. அவர்கள் தற்பொழுது தமிழர்கள் போன்று தமிழ் பேசுகின்றார்கள்.
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இரணமடு நீர்;விநியோகத்திட்டத்திற்கு வழங்கிய நிதி 10 வருடமாகின்றது. அந் நிதியை பயண்படுத்தாமல் மாகாணசபை ஆட்சியை ஏற்றதும் அதனை நிறுத்தி வைத்துள்ளார்கள். இந்த நிதிக்கு அரசாங்கம் கடந்த 3வருடமாக வட்டி செலுத்திக் கொண்டிருக்கின்றது.
நேற்று பாராளுமன்றத்தில் மகளிர் சிறுவர் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின்போது அரியநேந்திரன் பாராளுமன்ற உறுப்பிணர் உரையாற்றும்போது கிளிநொச்சியில் 80 ஆயிரம் அநாதைகள் மற்றும் விதவைகள் உள்ளதாகச் சொல்கின்றார். கிளிநொச்சியில் மொத்த சனத்தொகையே 1இலட்சத்தி12ஆயிரம் மட்டுமே.
வடக்கு மாகாணத்திற்கு 20.539.78மில்லியன் நிதி அரசினால் ஒதுக்கப்பட்டது. இதுவரை 14580 மில்லியன் ருபாவை மட்டுமே செலவளித்துள்ளனர். இதில் முதலமைச்சரின் வாகணங்கள், வாடகை வீடு. அவரது 5 அமைச்சர்களுக்கு பேஜரோ ஜீப் வாங்கியிருக்கின்றாhகள். அந்தக் பணமும் இந் நிதியில் அடங்குகின்றது. இன்னும் அடுத்த 2 மதங்களுக்குள் மிகுதிப்பணம் மீள செல்லப்போகின்றது. வெறுமனமே அரசு அதிகாரம் தரவில்லை, நிதி தரவில்லை, எனச் சொல்லித் திரிகின்றனர். வடக்கில் இராணுவ ஆட்சி என்று சொல்கின்றனர்.
அரசு கொடுத்த பணத்திற்கே எவ்வித திட்டமும் தயாரித்து செலவு செய்யத்தெரியாத முதலமைச்சர். அவர் கொழும்பு கருவாத்தோட்டத்தில் வாழ்ந்தவர் அவருக்கு எங்க தமிழ் மக்களிடம் அவலம் தெரியப்போகுது.
சுகாதார அமைச்சு 54 ஜஸ்கிரீம் நிறுவனங்களை நிறுத்தியிருக்கின்றார்கள். மலக் கழிவு கலந்து தண்னீர் ஜஸ் கீரிம் தயாரிக்கின்றார்களாம். இரணமடு நீர்திட்டத்தினை நிறுத்துவதற்கெல்லாம் மாகணசபை அதிகாரம் இருக்குமென்றால் இன்னும் அதிகாரம் கேட்கின்ற்hர்கள். 13வது திருத்தச் சட்டத்தின் அதிகாரத்ததை நான் பெற்றுக்கொடுப்பேன் அது வெல்ல முடியுமான இந்த ஜனாதிபதியின் ஊடே பெற்றுக்கொள்ளமுடியும்.
எங்களது நிலைப்பாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களையே நாங்கள் ஆதரிப்போம்; அவரது வெற்றிக்காகவே உழைப்போம். அவர்தான் 13வது சர்த்தை அவரிடம் பேசி நாடளுமன்ற தெரிபுக்குழுவிலும் பங்கு பற்றி அவரிடம் பெற்றுக்கொடுப்போம்.
அன்று இலங்கை இந்தியா ஒப்பந்தத்தில் வட கிழக்கு மாகணசபை அமுல்படுத்தியிருந்தால் இன்று வட கிழக்கில் சுயா நிர்ணய சபையொன்றை பெற்றிருக்கலாம். அல்லது கடந்த வருட மகாணசபையில் எங்களிடம் மாகாணசபையைத் மக்கள் தந்திருந்தால் வடக்கில் பால் ஆறும் தேனும் தரும் வகையில் வடக்கை மாற்றியிருப்போம்.

.jpg)
.jpg)
0 comments :
Post a Comment