ஒற்றுமை கயிற்றை பலமாக பிடிப்போம்!

சிறுப்பான்மை தலைமைகள் மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சியை எதிர்த்து மக்களுக்காக போது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் . 

இல்லாது ஆளும் கட்சிக்கு தொடர்ந்து ஆதரவளித்தால் இலங்கையில் உள்ள சகல பள்ளிகளும் உடைக்கப்பட்டு பாலஸ்தீன் இஸ்ரெல் போல் நாமும் நமது இருப்பை தக்க வைக்க போரிடும் காலம் வரும். 

அமைச்சி பதவிகளுக்கு ஆசைப்படாமல் தலைவர்கள் வித்திட்‌டு தாய் மாரின் கண்ணீரிலும் இளைஜர்களின் இரத்தத்திலும் பலரின் தியாககத்திலும் வளர்ந்த நாம் தேசத்தை வெட்டி கூறிடாமல் மக்கள் நலனுக்காக போது வேட்பாளரை ஆதரிக்குமாறும், இந்த அரசின் பகட காய் பம்மாத்து வித்தைகளுக்கு ஆசை படாமல் துனிகரமாக செயட்படுமாறு சிறுப்பான்மை கட்சிகளின் தலைமைகளை சிறுப்பான்மை மக்கள் சார்பில் வேண்டி கொள்கிறேன்.அது போன்றே ஏனைய பிரதான கட்சிகளும் மக்கள் நலன்கருதி பிரதான போது வேட்பாளரை ஆதரிப்பதன் மூலம் மாத்திரமே நமது அபிலாஷைகளையும் , உரிமைகளையும் பெற முடியும். 

இல்லாது சிறுப்பான்மை மக்களையும் உரிமைகளையும் மறந்து இந்த அரசுக்கு ஆதரவளித்து விட்டு பின்னாட்களில் புலம்புவது அர்த்தமற்ற செயல் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 

சகலரும் நமது உரிமைகளை வெல்ல ஒன்றாக இணைந்து செயட்படுவோம் நமது அபிலாஷைகளை வெல்ல இந்த அரசை எதிர்த்து வாக்களிப்போம். சிறுப்பான்மையின் ஒற்றுமையை காட்ட சரியான தருணமாக இத்தருனத்தை பயன்படுத்தி ஒன்றாக இணைவோம் .தேர்தல் காலத்து பொய் வாக்குறுதிகளை நம்பி நமது சிறுப்பான்மை இனங்‌களுக்கு இது வரை செய்த துரோகங்களை போல் இனிவரும் காலங்களிலும் செய்யாமலிருக்க அனைவரும் கட்சி,இன ,மத,மொழி,சாதி பேதங்கள் மறந்து போராட ஒன்றிணைவோம் .

 என சகல சிறுப்பான்மை மக்களுக்கும் சிறுப்பான்மை மக்கள் தலைமைகளுக்கும் ஜனயாயக மனித உரிமைகள் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அம்பாரை மாவட்ட இளையோர் அணி அமைப்பாளரும்,அல்-மிஸான் பௌண்டேஷன் தலைவருமான அல்ஹாஜ் ஹுதா உமர் வேண்டுகேள் விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :