கல்முனை சாஹிராவில் மூன்று மாடிக்கட்டிடத்துக்கான கல்நடுகையும் ஸ்தபாகர் நினைவு கூறலும்!

 ஹாசிப் யாஸீன்,எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்-

ல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் 65வது ஆண்டு தினத்தை முன்னிட்டு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மூன்று மாடி வகுப்பறைக் கட்டிட நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வு பாடசாலை காரியப்பர் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது

பாடசாலையின் அதிபர் பீ.எம்;.எம்.பதுர்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இக்கட்டிடத்திற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்;, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது கோட்டக் கல்வி அதிகாரி ஐ.எல்.ஏ.றகுமான் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப், கல்முனைக்குடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், பாடசாலையின் அபிவிருத்திச் சபையினதும், பழைய மாணவர் சங்கத்தினரதும் பிரதிநிதிகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலையின் 65வது ஆண்டு தினத்தை முன்னிட்டு தேசிய ரீதியில் சாதனை படைத்த மணவர்கள், நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்;டதுடன் பாராளுமன்ற உறுப்பினரின் சேவையினை பாராட்டி பாடசாலை சமூகத்தினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :