முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்-
உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் இலவச டிஸ்கவரி மோட்டார் சைக்கிளும் , 25000/= பண ஒதுக்கீடும் செய்யப்பட உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முசலிப்பிரதேசத்தில் ஏறத்தாழ 30 கிராமங்கள் உள்ளன.
இவற்றில் சில கிராமங்கள் பெரியவை(சனத்தெகையில்) சில கிராமங்கள் சிறியவை , பெரிய கிராமங்களை மையமாகக் கொண்டே உள்ளுராட்சி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு கடந்த காலங்களில் அமைச்சரால், 1 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போது இவர்கள் சிறிய கிராமங்களை கைவிட்டு விட்டு , தம்தம் கிராமங்களில் மட்டும் அபிவிருத்தி வேலையில் ஈடுபட்டுக் கொண்டனர்.இதனால் சிறிய கிராம மக்கள் தமது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
இதே நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது.அவர்களின் வாக்குகள் எப்படி தேவைப்பட்டதோ, அப்படி அபிவிருத்தியையும் நியாயமாகச் செய்ய வேண்டிய தார்மீகக் கடமை இவர்கட்கு உண்டு.இவர்கட்கு சரியான வழிகாட்டலையும் , ஆலோசனையையும் அமைச்சர் அவர்கள் வழங்கவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0 comments :
Post a Comment