தேர்தல் ஆணையாளருக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தொடர்வேன் -முன்னாள் நீதியரசர்

அஷ்ரப் ஏ சமத்-

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும் முழு அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கும் கூட்டம் கங்காரமை பண்சலைக்கு அருகில் கொழும்பு முத்தையா மைதாணத்தில் சிகல உருமையவின் தலைவர் அத்துரேலிய ரத்னத் தேரர் தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா-

எனது 41 வருடகால சட்ட சேவைக் காலத்தில் - மஹிந்த ராஜபக்ச தனது அறைக்குள் இந்த நாட்டின் பிரதம நீதியரசர் மொஹானை அழைத்து இவ்வாறு தீர்ப்புச் சொல்லு. என்ற கீழ்த்தரணமான வேலையை நான் எனது வாழ்க்கை பார்த்தில்லை. எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தல் அழைப்பாணை ஆணையாளரினால் விடுத்தால் மஹிந்த 3வது முறையும் வேட்பாளராக தேர்தல் ஆணையாளர் அவரது மனுவை ஏற்றால் ஆணையாளாருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழங்குத் தொடருவோம்.


பாராளுமன்ற உறுப்பிணர் அர்ஜூன ரணதுங்க 

எனது தந்தை ரணதுங்க காலம் சென்ற பண்டாரநாயக்க மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையில் இருந்து வந்த ஸ்ரீ.ல.சு.கட்சியைச் சேர்ந்த பரம்பரையினர். ஆனாலும் எனக்கு என்று ஒரு கொள்கை உள்ளது. நான் நிறம் கட்சி, மதம், குலம் இல்லாமல் ஒரு புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கும் ஒரு சிறந்த தலைமைத்துவத்திற்காகவே நான் உழைக்கின்றேன்.

ஜே.வி.பி லால் காந்த

அத்துரேலியத் தேரர் ஜனாதிபதியிடம் முன்வைத்த யோசனைகளுக்கு எமது கட்சி ஆதரவலிக்கின்றது. அவர்கள் அதிகாரமளிக்கப்ட்ட ஜனாதிபதிமுறைமையை ஒழிக்கச் சொன்னார்கள். அமைச்சரவையை குறைக்கச் சொன்னார்கள். 

17ஆவது திருத்தத்தை அமுல்படுத்தச் சொன்னார்கள். தற்போதைய விருப்பு வாக்குமுறையை மாற்றி அமைக்கச் சொன்னார்கள். ஜனாதிபதி ஒரு முறை 6 வருடம் மட்டுமே பதவி வகிக்க வேண்டும். அதனை இத் தேர்தலுக்கு முன் அமுல்படுத்துமாரு ஜனாதிபதியை கேட்டுக்கொண்டனர். இவை இத்தனைக்கும் எமது கட்சி ஆதரவலிக்கின்றது. 

கடந்த மேல் தென் மாகாணசபைத் தேர்தலின்போது மஹிந்த ராஜபக்சவின் கட்சிக்கு 2இலட்சத்து 75ஆயிரம் வாக்குகள் குறைந்துள்ளது. கடந்த மாகாணசபையில் 40 உறுப்பிணர்களிலிருந்து இம்முறை 18 மாகாணசபை உறுப்பிணர்கள் குறைந்துள்ளனர். கொழும்பிலும் அவாகள் தோல்விகண்டுள்ளனர். 

இதனாலேயே மக்கள் பல் குறைந்து கொண்டு செல்கின்ற படியால் அவர் அவசர அவசரமாக 4 வருடத்திற்குள் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை நாடத்தி 6 வருடம் மீள ஆளப் பாக்கின்றார். அவருக்கு இப்பவும் 3-2 பாராளுமன்ற ஆதரவு இருக்கின்றது. இந்த 18வது அரசியலமைப்பை அமுல்படுத்தி விதாயக்க ஜனதிபதிமுறையை ஒழித்துக் காட்டி பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்க முடியும். இதையே சிகல உருமைய அரசுக்குள் இருந்து கொண்டு சொல்லிவந்தது. 

மஹிந்தவின் 10 நீதிபதிகளுக்கும் நாங்கள் 18வது அரசியல் சர்த்தை ஒவ்வொரு வரியாக சொல்லிக் கொடுப்பதற்கு அவர்களை அழைக்கின்றோம். இதற்கு எதிராக நாங்கள் நீதிமன்றம் மட்டுமல்ல மக்களிடமும் வீடு வீடாகச் செல்வோம்.

மாதுலாவேத் தேரோ

அமைச்சர் திஸ்சவிதாரண ; இந்த ஜனாதிபதியை முறைமையை ஒழிப்பதற்கு உதவுவாதாகவும் அதற்காக நான் தயார் என்று சொன்னார். அதே போன்று தினேஸ் குணவாத்தன, டி.யு குணசேகர, வாசுதேவ நாணயக்கார, அமைச்சர் ரேஜிநோல்ட் குரே, ஆகியோர்கள் ஜனாதிபதிமுறையை ஒழிப்பது சம்பந்தமாக அவர்கள் பத்திரிகைகளில் தெரிவித்த பத்திரிகைச் செய்திகளையும் தேரர் அங்கு வாசித்துக் காட்டினார். ஆனால் இப்போது அவர்கள் மீண்டு;ம் மஹிந்தவின் பிண்னால் சென்றுள்ளனர். 

ஆனால் இந்தக் கூட்டத்தில் அவர்களது கட்சிகள் இரண்டாக பிளவுபட்டுள்ளனர். இடதுசாரிக் கட்சிகள் பலர் இங்கு எங்களுக்கு ஆதரவளிக்க வந்துள்ளனா.;. மஹிந்த இந்த ஜனாதிபதித் தேர்;தலின் 500 கோடி ருபாவை நாஸ்டமாக்குகின்றார். இது யாருடை பணம் பொது மக்களுடைய பணம் அவர்களது வீட்டிலிருந்து வந்த பணம் அல்ல.

ரத்துரேலியத் தேரர் சிகல உருமைய

4 நாற்களுக்குள் இவ்வாறானதொரு கூட்டத்தினையும் சகல எதிhகட்சிகளையும் ஒரே மேடையில் கூட்ட முடிந்தது. இங்கு இலட்சக்கண்கான மக்கள் இங்கு வந்துள்ளீர்கள். இதனை பொலிசார் பல வழிகளிலும் பாதைகளை மறித்து மக்களை வேறு பாதைக்கு மாற்றி தடுக்கின்றனர். 
 
இந்த நாட்;டில் சூது மண்னர் ஜேம் பேக்கர் சூது களப்புக்களுக்கும் விலைமாதுகளுக்கும், குடிபோதைகள் அரன்களையே இந்தக் கொழும்பில் மஹிந்தவின் சகோதரர்கள் செய்து வருகின்றனர். சூது சட்டத்தையை இவர்கள் இரவோடு இரவாக களவாக வர்த்தமாணியில் அறிவித்து பாராளுமன்றத்திலும் சட்டத்தினை பாஸ் பண்னினார்கள். 

மதுபாணச்சாலைகள் இந்த ஆண்டு மட்டும் 120 லைசென்ஸ் வழங்கியுள்ளார்கள். எத்தினோல் காரர்களை சலுகைகளை வழங்கி அவர்களை வளாத்து வருகின்றர். சீனா நாட்டிற்கு இந்த நாட்டை தாரை வாத்துக் கொடுத்துள்ளனர். நுரைச்சோலைi மிண் திட்டத்தினால் பல கோடி ருபா பணத்தை வீண் விரயம் செய்துள்ளனர். எவ்வித டெண்டரும் இல்லாமல் அதில் 30வீத கொமிசனை பெற்றுக் கொள்கின்றனர். 

மஹிந்த ராஜபக்சதான் இந்த நாட்டின் யுத்ததை வென்றதாகச் சொல்லுகின்றார்கள். இந்த யுத்தத்தினை நடாத்தி வென்றெடுக்க வேண்டும் என்ற பிடியில் நின்றவர்கள் சிகல உருமய இந்த வெற்றிக்கு உரிமைக்காரர்கள். 
 
இம்முறை ஜனாதிபதித் தோதலில் மஹிந்த வெற்றிக்காக லொத்தர் பஜட்டை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த பஜட் அவரின் வெற்றிக்கா அமைத்துக்கொண்டது. அதன் பின்னர் பொருளாதாரத்தில் கடன்களில் இந்த நாடு சின்னா பின்னமாகும். ஆகவே இந்த மஹிந்த ராஜபக்சவினை நாம் எல்லோரும் ஒன்று கூடி ஒரே அணியில் நாடு பூராவும் மக்களை ஒன்று திரட்டி அவரைத் தோற்கடிப்போம். மஹிந்தவின் வீட்டில் குஸ்னியில் வேலைசெய்யும் வேலைக்காரியைக் கூட அவர் உயர் நீதிமனற் நீதிபதியாகவும் ராஜதந்திரியாகவும் நியமிப்பார்கள் அந்த அளவுக்கு இந்த நாட்டின் நிருவாகம், நீதி, சட்டம் ஓழுங்குகள் சீர்கெட்டுப் போகிவிட்டன. 

பௌத்த தர்மத்தை இந்த நாட்டில் இல்லாமல்ச் ; செய்துவிடுவார். அவர் பொய்க்கு புத்தர் சிலைகளை அமைக்கின்றாh. ஆனால் அவரின் எண்னத்தில் எவ்வித பக்தியும் இல்லை. என அத்துருலியத் தேரர் அரை கூவல் விடுத்தார்.

ரணில் விக்கிரமசிங்க

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஜனாதிபதி 3வது முறையாகவும் தேர்தல் கேட்க முடியும். என பேப்பரை வைத்துக் கொண்டு செல்கின்றார். நான் சொன்னேன். பாராளுமன்றத்திற்கு அந்த 10 உயர் நீதிபதிகளையும் அழைத்து வாருங்கள் இங்கு அவர்கள் ஒவ்வொரு வரியாக சட்ட நுனுங்கங்களை அவர் வழங்கிய ஆலோசனை விளக்கம் ;தரல்வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன்.

 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் 18வது சர்த்தை அமுல்படுத்தியதால் பாராளுமன்றத்திற்கு எவ்வித அதிகாரம் இல்லாமல் போகிவிட்டது. 19வது 17வது அரசியல் அமைப்பை நாளை அவர் பாரளுமன்றத்திற்கு கொண்டு வந்தாலும் எதிர்கட்சிகள் அணைத்தும் சேர்ந்து நாங்கள் வாக்களிப்போம்.

 இந்த ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு நான் எனது பூரண ஆதரவை வழங்குவேண். ராஜபக்ச ரெஜிமை நாம் ;இல்லாதொழிக்க வேண்டும். அதற்காக நான் பூரண ஒத்துழைப்பை வழங்குவேண். எதிர்கட்சி என்ற முறையில் நாங்கள் வெளியில் இருந்து கொண்டு போராடுவோம். ஆனால் சிகல உருமைய அவரின் அரசில் இருந்து கொண்டு போராட்டை தொடுத்து ஏனையவர்களையும் வெளியில் எடுத்துக்கொண்டு ஒன்று சேருவோம் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :