அம்பாறை - சம்மாந்துறை - சொறிக்கல்முனையில் நான்கு வயது சிறுவன் ஒருவன் நிலத்தடி கிணறில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை ரவி அனுசாந்த் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நேற்று காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த இவர், கிணற்றினுள் கிடப்பதைக் கண்ட அயலவர்கள் உடனடியாக மீட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போதிலும் காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் ஸ்தலத்துக்கு விரைந்த அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments :
Post a Comment