பிரதமர் பதவி வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள தயார்-மைத்திரிபால சிறிசேன

பிரதமர் பதவி வழங்கப்பட்டால் அதனை ஏற்கவுள்ளதாக தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தேசிய தேர்தலொன்றுக்கு தமது கட்சி தயாராகிவருவதாகவும் முதலில் ஜனாதிபதி தேர்தலா அல்லது பொதுத்தேர்தலா நடைபெறும் என்பது தொடர்பில் இறுதி முடிவுகள் இதுவரையில் எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வௌியிடுகையில்,

நாம் தேசிய தேர்தலொன்றுக்குத தயாராகி வருகின்றோம். எமது கட்சியின் சார்பாக பல்வேறு வேலைத்திட்டங்களை கடந்த மாதம் முன்னெடுத்திருந்தோம். சுதந்திரக் கட்சியின் காரியங்களையும் பிரதேச ரீதியில் அமைத்துவருவதுடன் தொகுதி அமைப்பாளர்கள், இளைஞர், மகளிர் அணிகள், ஆகியவற்றை ஒன்று திரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இதன் மூலம் எமது கட்சி பெரும் பலத்தை பெற்றுக்கொண்டிருக்கின்றது.

இன்று எதிர்க்கட்சியைப் பார்த்தால் எந்தவிதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்காது உள்ளது. குறிப்பாக தேசிய தேர்தலுக்கான பயணத்தில் எதிர்க்கட்சி எங்கிருக்கின்றது என்பதையே காணமுடியாதுள்ளது. நாம் அவர்களை கடந்து நெடுந்தூரம் பயணித்து முன்னிலை பெற்றிருக்கின்றோம். நாம் மக்களுடைய பேராதரவைப் பெற்ற கட்சியாக என்ற அடிப்படையில் இந்த நாட்டில் சமானத்தையும் அபிவிருத்தையும் கடந்து அனைத்துப்பணிகளையும் முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றோம். தொடர்ந்தும் மேற்கொள்வோம்.

தற்போது எதிர்க்கட்சிகளை எடுத்துப்பார்த்தால் குறிப்பாக ஐக்கியதேசியக் கட்சியாக இருக்கலாம் அல்லது மக்கள் விடுதலை முன்னணியாக இருக்கலாம் அவை அனைத்தும் தமது உள்ளகப் பிரச்சினைகளை தீர்க்கமுடியாத நிலையில் காணப்படுகின்றன. இன்றுவரையில் அதனை முடிவுக்கு கொண்டுவந்து ஆகக் குறைந்தது ஒரு எதிர்க்கட்சியாக இருப்பதற்குரிய நடவடிக்கைகளைக் கூட எடுக்கவில்லை.

பொதுவேட்பாளர்

1982ஆம் ஆண்டிற்கு பின்னர் நடைபெற்ற அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் பொதுவேட்பாளர் தொடர்பில் பேசப்பட்டு வருகின்றது. இருந்தபோதும் பொது வேட்பாளர் முறையை சரியான முறையில் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்கவில்லை. 1994ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க , தொடர்ந்து 2005இல் 2010இல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‘ ஆகியோர் பாரிய கூட்டமைப்பை ஒன்றிணைத்து தேர்தலில் களமிறங்கி வெற்றிபெற்றனர்.

நாம் தேசிய தேர்தலுக்காக ஆயத்தங்களை ஆரம்பித்து மூன்று மாதங்களாகின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்‘ தலைமையில் யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியுள்ளோம். அந்த வகையில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்படும் தடைகளைக் கடந்து எமது சேவைகளை தொடர்வோம்.

ஜனாதிபதி தோதலா அல்லது பொதுத்தேர்தலா முதலில் நடைபெறும் என்பது தொடர்பில் தற்போது வரையில் உத்தியோக பூர்வமான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை. ஜனாதிபதித்தேர்தல் முதலில் நடைபெற்றால் எமது கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மகிந்தராஜபக்‘வே களமிறங்குவார்.

பிரதமர் பதவி

அண்மையில் எமது கட்சியின் மாவாட்ட கிளைக் கூட்டங்கள் இடம்பெற்றன. குறிப்பாக பொலநறுவையில் இடம்பெற்ற கூட்டத்தில் இதில் சிறு குழுவினர் இவ்வாறான யோசனையை முன்வைத்தார்கள். அது தொடர்பாக உத்தியோக பூர்வமாக எந்த முடிவுகளும் இல்லை. அதோபோன்று தனிப்பட்ட முறையில் என்னிடம் எந்தவிமான தீர்மானமும் இல்லை. இருப்பினும் ஜனாதிபதி பிரதமர் பதவியை தந்தால் அதனை ஏற்றுக்கொள்வேன்.

நீதிமன்றையே நாடவேண்டும்

ஜனாதிபதி மூன்றாவத தடவையாக போட்டியிடுவதென்பது நீதிக்குப் புறம்பானது என மக்கள் விடுதலை முன்னணி கூறுவதானது நீதிமன்றத்துடன் தொடர்புடைய விடயம் என்பதால் அங்கு சென்றே இறுதி முடிவை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :