கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் உயிரிழந்த மற்றுமொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது இந்த சடலம் இன்று மீட்கப்பட்டதாக மத்திய பாதுகாப்புப் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா கூறினார்.
இதற்கமைய மண் சரிவு மீட்கப்பட்ட பகுதியிலிருந்து இதுவரை ஏழு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீரியபெத்த பகுதியில் இன்று சீரான வானிலை நிலவுவதாகவும் மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, கொஸ்லாந்தை மீரியபெத்தவில் ஏற்பட்ட மண்சரிவு தொடர்பான விசாரணை அறிக்கையை ஒரு வாரத்திற்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.
குறித்த மண்சரிவு தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.
இதேவேளை கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவில் சிக்கி 40ற்கும் குறைவானோரே காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரவித்துள்ளார்
மண்சரிவு இடம்பெற்ற பகுதிகளில் நேற்று இடம்பெற்ற மீட்பு நடவடிக்ககைளில் பெண்ணொருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புப் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மனோ பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் மண்சரிவில் சிக்கியுள்ளோரை மீட்கும் நடவடிக்கைகளை இன்றும் முன்னெடுக்கவுள்ளதாக மத்திய பாதுகாப்புப் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மனோ பெரேரா மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment