எம்.வை.அமீர்-
கல்முனைக்குடி 08 ம் பிரிவு கிராம அபிவிருத்திக்குழுவின் ஏற்பாட்டில் குறித்த பிரதேசத்தில் வாழும் முதியோரைக் கௌரவிக்கும் நிகழ்வு (2014-11-15) ல் கல்முனைக்குடி 08 ம் பிரிவு கிராம அபிவிருத்திக்குழுவின் தலைவர் எம்.எச்.முஹம்மத் ஆதம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பாராளமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்,ஹரீஸ் கலந்து கொண்டார். நிகழ்வுக்கு அதிதிகள் வரிசையில் மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலர் எச்.எம்.கலீலுல் ரஹுமான் மாவட்ட சமூக சேவை அலுவலர் எம்.வி.எம்.சம்சுதீன் எம்.ஐ.எம்.முகர்ரப், ரீ.அன்சார் போன்றோரும் கலந்து கொண்டனர்.
விசேட பேச்சாளராக பேஷ் இமாம் எம்.ஐ.எஸ்.ஹமீத் கலந்து சிறப்புரையாற்றினார். அதேவேளை நிகழ்வுக்கு வருகை தந்திருந்த சிரேஷ்ட குடி மக்களுக்கு பாராளமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்,ஹரீஸினால் கௌரவம் வழங்கப்பட்டு பொருட்களும் வழங்கப்பட்டன. அத்துடன் நீண்ட காலம் குறித்த பிரதேசத்தில் கடமையாற்றிய கிராமசேவை உத்தியோகத்தருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment