நிந்தவூர் வயற் காணிகளில் ஏற்படும் பயிரழிவைக் கட்டுப்படுத்த சுலைமாலெவ்வை நடவடிக்கை!

வெள்ளப் பெருக்கின் காரணமாக நிந்தவூர் பிரதேச வயற் காணிகளில் தொடர்ச்சியாக ஏற்படும் பயிரழிவைக் கட்டுப்படுத்தும் வகையில் நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் வை.எல். சுலைமாலெவ்வை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். 

கிழக்கு மாகாண ஆளுநர் றியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம அவர்களுடன் நடத்திய விஷேட சந்திப்பையடுத்து இந்த வயல் நிலங்களை பாதுகாக்கும் வகையில் பாரிய அணைக்கட்டு அமைக்க ஆளுநர் அனுமதியளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

இதேவேளை மாட்டுப்பளை, வடகண்ட மற்றும் தென்கண்ட பகுதியிலுள்ள விவசாயக் காணிகளில் ஏற்படும் தொடர்ச்சியான அழிவுகளை ஆளுநரிடம் சுட்டிக் காட்டிய போது மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வையுடன் தொடர்பு கொண்ட ஆளுநர், அதற்கான திட்டங்களை தயாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார். 

மேலும் இந்தப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பாரிய பிரச்சினையால் விவசாயிகள் பெருமளவில் பாதிப்படைவதாகவும், நெல் உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் சுலைமாலெவ்வை சுட்டிக் காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :