சுலைமான் றாபி-
பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், கல்முனை அன்சாரிஸ் சுன்னதுல் முஹம்மதிய்யா பள்ளிவாசலுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் தளபாட வகைகளை கல்முனை பிரதேச செயலகத்தின் கணக்காளர் எம்.எம்.எம். ஹுசைன் அவர்களினால் அண்மையில் பள்ளிவாசல் தலைவர் ஏ.டபிள்யு.எம். அத்னான் மற்றும் பள்ளிவாசலின் செயலாளர் கே.எல். சுபைர் ஆகியோர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலகத்தின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.எல். ஜௌபர் மற்றும் காணிப்பிரிவு பிரதம எழுதுனர் ஏ.அப்துல் மஜீட் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)
0 comments :
Post a Comment