அஹமட் இர்ஸாட் மொஹமட் புஹாரி-
1980 காலப்பகுதியில் கல்குடாவின் முஸ்லிம் பிரதேசத்தில் வைத்திய துறையானது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்பட்டது. அக்காலப் பகுதியில் மட்டகளப்பு மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களான ஏறாவூர், காத்தன்குடி போன்ற பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது கல்குடா முஸ்லிம் பிரதேசம் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வந்தது. அன்று GCE சாதாரனப் பரீட்ச்சைக்கு பதிலாக இருந்த SSCபரீட்ச்சையில் சித்தியடைந்தவர்களுக்கு முஸ்லிம்களின் தலைவனாக மதிக்கப்பட்ட முன்னால் கல்வி அமைச்சர் மர்ஹும் பதியுதீன் மஃமூட் அவர்களினால் நாடலாவிய ரீதியில் கொடுக்கப்பட்ட ஆசிரியர் நியமனங்களை பெற்றவர்ளும் விதானை மார்களுமே சமூகத்தால் படித்தவர்கள் என பார்க்கப்பட்ட காலமாகும். இக்காலப் பகுதியில் கல்குடா பிரதேசத்தில் MBBS பட்டம் பெற்ற வைத்தியராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த குகதாசன் என்பவரே தனது வைத்திய சேவையை கல்குடா மக்களுக்காக வழங்கி வந்தார்.
போக்குவரத்து சாதனங்களளும், மருந்துகளும் தட்டுப்பாடான அக்காலத்தில் கல்குடாவின் தமிழ் பிரதேசத்திலேயே வைத்தியர் குகதாசன் தனது பகுதி நேர வைத்திய சாலையினை அமைத்திருந்தார்.
இக்காலப்பகுதியில்கல்குடாவில்வைத்தியர்களின்தட்டுப்பாட்டை உணர்ந்திருந்த வெளிப்பிரதேசத்தில்இருந்து வந்த வைத்தியர்கள்கல்குடா மக்களுக்கு வைத்திய சேவையினை வழங்குவதன்மூலம்தாங்களும் வைத்திய துறையில்முக்கிய இடத்தினை பிடித்துக்கொள்ளலாம் என்ற நோக்கோடு கல்லுகுடா பிரதேசத்தில்தங்களது வைத்திய சாலைகளை அமைக்கத்தொடங்கினர். அந்த வகையிலே வந்தவர்கள்தான் வைத்தியர்களான வைத்திய நாதன்இ பஞ்சாட்சரம், மர்ஹூம் சித்திபலீலாஆகியோர்கள். இதன்அடிப்படையிலேயேதான் 1978ம்ஆண்டு 12ம்மாதம்28ம்திகதி நாகூர்மொஹைடீன்பாவா என தனது பெயரினை கொண்ட
மொஹைடீன்டாக்டர்கல்குடாவில்,அதிலும் ஓட்டமாவடியை மையமாகவைத்து தனது வைத்திய சாலையை நிறுவினார். இவர்ஓட்டமாவடிக்குசெய்துள்ள வைத்திய சேவையினை சொல்லப்போனால்எந்த எழுத்தாளனாலும்இவருடைய சேவை பற்றிய வரலாறு எழுதப்பட்டுள்ள ஏட்டில்ஒரு எழுத்தினை கூட மாற்றிவிட முடியாது எனும்பார்வையிலேயே எனது அறிவுக்கு எட்டிய மட்டில்நான்விவாததுக்கு வருவேன்.
கல்குடா சமூகத்துக்கு கத்தான்குடி மண் ஈன்றெடுத்த ஒரு சொத்தாக நினைத்து இவருக்கு ஏன் என்னால் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்ற கேள்வி பலருக்கு உதிர்ப்பது ஒரு சர்வசாதாரனமான விடயமாக இருந்தாலும், நான் இவரைப் பற்றி எழுதியது சரிதான் என அனேகமானவர்கள் கருதக்கூடும் என்ற நம்பிக்கைதான் கல்குடா சமுகத்தால் இவர் கெளரவப் படுத்தப்ட வெண்டும் என என்னை சிந்திக்கத் தூண்டியது. 1985ம் ஆண்டு தமிழ் முஸ்லிம் கலவரங்களின் போதும்,அதற்கு பிற்பாடு இலங்கையில் ஏற்பட்ட இரண்டாம் கட்டப் போரினாலும் பெரிதும் பாதிகப்பட்ட எமது கல்குடா முஸ்லிம் பிரதேசமானது வைத்தியர்களின் சேவைகள் இன்றி தட்டுத்தடுமாறிய நேரத்தில் தான் மட்டக்களப்பிலே வைத்தியர் வின்சனிடம் ஆங்கில மருந்தகத்தில் அதிக காலம் வேலை செய்ததன் பலனாக கிடைத்த அனுபவத்தினாலும், வைத்தியர் வின்சனிடம் ஆங்கில மருத்துவம் பற்றி கற்றுக் கொண்டவற்றையும், செயல் முறையினையும் வைத்தே துணிச்சலுடன் அல்லாஹ்வில் நம்பிக்கை வைத்தவராக யுத்தத்தினால் உயிருக்கு போராடிய எமது மக்களுக்கு வைத்தியம் பார்த்து பலரது உயிரினை காப்பாற்றி உள்ளார் என்பதுதான் எனக்கு முக்கிய காரணமாக தென்பட்டது இவரைப் பற்றிய வரலாற்று கட்டுரை ஒன்றை எழுதிவிட வேண்டுமென்று.
1987,1989 காலப்பகுதியில் வடகிழக்கில் இந்திய அமைதிகாக்கும் படையினர் இருந்த நேரத்தில் சரமாரியான மோட்டார் குண்டுகளில் சிக்குண்டு அப்பாவி பொதுமக்கள் பலர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வேளையில் இவருடைய வைத்திய சாலையிலே அவர்களுக்கான ஆரம்பகட்ட சிகிச்சையினை உரிய நேரத்தில் வழங்கியதன் பலனாக பலரது உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இக்காலப்பகுதியில் நானும் எனது குடும்பமும் இவருடைய வீட்டில் வாடகைக்கு இருந்ததினால் அவ்வாறான சம்பவங்களை நேரடியாக கண்டவன் என்றடிப்படையில் என்னால் அவரை கல்குடா சமூகத்தில் சாதாரன மனிதர் என நினைத்து விட முடியாத நிலைக்கு அன்றே தள்ளப்பட்டேன். அது மட்டுமல்லாமல் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு யுத்தம் மூழ்கியிருந்த காலப்பகுதியில் கர்பிணிப் பெண்களுக்கு நடுராத்திரியில் பாரிய வருத்தம் ஏற்படும் பட்ச்சத்தில் இவரே வீட்டுக்கு அழைத்து வரப்பட்டும், நடுநிசி என்றும் பாராமல் எந்த நேரத்திலும் நோயாளிகளுக்காக தனது வீட்டுக்கதவினை துறக்கக்கூடியவாரகவே காணப்பட்டார்.
மேலும் இணைய நாளிதளுக்காக பல தகவல்களை பெற்றுகொள்ளும் நோக்கத்தில் இவரை சந்தித்த போது வாழைச்சேனையில் 1990 காலப்பகுதிக்கு முன் ஒரு ஓரே தடவையில் மூன்று குழந்தைகளை பிரசவிக்க இருந்த பெண்மனிக்கு தான் மருத்துவம் செய்ததன் பலனாக மூன்று குழந்தைகளும், தாயும் காப்பாற்றப்பட்டதையும், அதில் இரண்டு குழந்தைகள் இன்னும் உயிருடன் வாழ்வதாகவும் அல்லாஹ்வை ஞாபகப்படுத்தி பெருமைப்பட்டுக் கொண்டார். இந்த 80ம் ஆண்டு பகுதியிலேயே கல்குடா முஸ்லிம் பிரதேசத்தின் முதலாவது MBBS.பட்டம் பெற்ற வைத்தியர் அஜ்வாத் அவர்கள் வாழ்ந்த காலமாக இருந்தாலும், அவர் யுத்த சூழலினால் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாகவும், அவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாகவும் வெளிமாவட்டங்களில் உள்ள வைத்திய சாலைகளிலே தனது தொழினை செய்து கொண்டிருந்தார். அவ்வாறான கட்டத்தில் வைத்தியர் அஜ்வாத் அவர்கள் அப்போதைய சூழ்நிலையில் செய்ய வேண்டிய சமூகத்துக்கான தார்மீகப் பொறுப்பினையும் டாக்டர் மொஹைதீனே செய்தார் என்பது உண்மை வரலாறு.
இவ்வாறு கல்குடா சமூகத்துக்கு அனுபவப் படிப்பினால் உயரிய வைத்திய சேவையினை வழங்கி வந்த டாக்கர் மொஹைதீன் அன்றைய மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையும், மதிப்புமிக்கவராகவே காணப்பட்டார். கல்குடா மக்கள் மத்தியில்அன்று இவரிடம் மருந்து எடுத்து சாப்பிடும் பட்சத்தில்தான் தங்களது வருத்தம் குணமாகும் என்ற நம்பிக்கை எங்கும் சிதறி அடிக்கப்பட்டு பரவலாக காணப்பட்டது. நான் சிறுவனாக இருக்கும் போது எனது வீட்டில் ஒரு MBBS. பட்டம் பெற்ற வைத்தியர் இருந்தும், அக்காலகட்டத்தில் சமூகத்தின் மத்தியில் எதனையும் எதிர்நோக்கும் கல்வி அறிவினை கொண்ட எனது தந்தையார் நான் நோய்வாய்பட்டிருக்கும் வேலையில் சந்தர்ப்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு டாக்டர் மொஹைதீனிடமே என்னை அழைத்துச் சென்றதை நினைக்கும் போது இன்றும் இவருடைய வைத்தியத்தில் ஒரு நம்பிக்கை என்னிடம் இருந்தே வருகின்றது.
எமது பிரதேசத்தில் இபோது பெருமளவான MBBS பட்டத்தினை பெற்ற வைத்தியர்கள் அனேகமாக உருவாகியுள்ளனர். அல்ஹம்துலில்லஹ், இவர்கள் அனைவரும் ஒரு தடைவையாது அவர்களுடைய வாழ்நாள்களில் நோய்வாய்ப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் டாக்டர் மொஹைதீனுடைய மருந்தினை சாப்பிட்டே இருப்பார்கள் என்பதும் நிதர்சனமான வரலாற்று உண்மையாகவே இருகின்றது. எது எவ்வாறாக இருந்தாலும் வைத்திய துறையில் பல கண்டுபிடிப்புக்கள் நாளுக்கு நாள் நடந்தேறிக் கொண்டிருந்தாலும் இவருடைய மருந்தினை சாப்பிட்டால்தான் தங்களது வருத்தம் குணமாகும் என்ற நம்பிக்கை கொண்டோர் கல்குடா பிரதேசத்தில் இன்னும் அனேகமாகவே காணப்படுகின்றனர் என்பது நிகழ்கால உண்மை என்பதில் விவாததுக்கு இடமில்லை.
இவ்வாறு கல்குடா சமூகத்துக்கு மட்டகளப்பு வின்சன் வைத்தியரிடன் கற்றுக் கொண்ட அனுபவ ஆங்கில மருத்துவத்தை கொண்டு கல்குடாவில் மருத்துவரின் தேவை இன்றியமையாத தேவையாக இருந்த நேரத்தில் துணிச்சலோடு சமூகத்துக்கு உதவிய இவரைப்பற்றி கூடுதலான விமர்சனங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இவர் ஒரூ போலி வைத்தியர் என்றும், வைத்தியர்களிடம் மருந்து கலக்கியவர் என்றும், மருத்துவ பீடத்தின் வாசலை கூட மிதிக்காதவர் என்றும் பல கோணங்களில் இருந்து பலவாறு விமர்சனங்கள் இன்று வரைக்கும் எழுந்த வண்ணேமே இருக்கின்றது. இவ்வாறான விமர்சனங்கள் உண்மைக்கு நியாயமானதாக இருந்தாலும், கல்குடா சமூகத்துக்கு மருத்துவரின் தேவைப்பாடு மிக முக்கியமாக இருந்த காலகட்டத்தில் இவரின் மருத்துவ உதவி இல்லாமல் இருந்திருந்தால் கல்குடா சமூகம் அன்று எவ்வாறான சிக்கல்களுக்கு முகம்கொடுத்திருக்கும் என்ற உண்மை நிலையினை நினைத்துப் பார்க்க விரும்பினால்? எண்பது காலப்பகுதியை பின்னோக்கிப்பார்ப் போமானால் டாக்டர் மொஹைதீனைப் பற்றி நான் ஏன் எழுதுகின்றேன் என்ற காரணமும் எல்லோருக்கும் சர்வசாதாரணமாக வெளிச்சமாகிவிடும்.
போலிமருத்துவம், MBBS பட்டம் இல்லாமை பற்றிய விமர்சனங்களை இவரிடம் நான் வினவிய போது, அதனை எந்த மாற்றுக்கருத்துக்களும் இல்லாமல் ஏற்றுக் கொண்ட டாக்டர் மொஹைதீன், அன்று நான் கற்றுக் கொண்ட அனுபவப்படிப்பை வைத்து தக்கசமயத்தில் கல்குடா மக்களுக்கு உதவ கிடைத்ததை இட்டு முதலில் அல்லாஹுக்கு நன்றி செலுத்துகின்றேன் எனக் கூறியவர், எண்பது, தொன்னூறு காலப்பகுதியானது யுத்தகாலப்பகுதியாக காணப்பட்டதனால் வடகிழக்கு மாகாணங்களில் சிவில் நிருவாகம் முழுமையாக பின்பற்றப்படாத முக்கிய காரணத்தினால்தான் என்னால் அன்று கல்குடா மக்களுக்கு அத்தியவசிய தேவையாக இருந்த மருத்துவத்தை துணிச்சலோடு செய்யமுடிந்தமை பற்றி கூறியதோடு, அன்று நான் கல்குடா பிரதேசத்துக்கு வைத்திய சேவையினை வழங்கும் போது தன்னுடன் காத்தான் குடியை சேர்ந்த மர்ஹூம் இஸ்ஸடீன் வைத்தியரும் இருந்ததாக நினைவு கூர்ந்தார்.
மேலும் தற்போது யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் வடகிழக்கில் சிவில் நிருவாகம் சீரான முறையில் கடைப்பிடிக்கப் படுவதனாலும், நிகழ்கால மக்கள் மத்தியில் மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள விழிர்ப்புனர்ச்சி காரணமாகவும், கல்குடாவில் அதிகரித்து வருகின்ற MBBS பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை காரணமாகவும், தான் ஆங்கில மருத்துவ சிகிச்சையினை முழுமையாக கைவிட்டுள்ளதாக கூறிய டாக்டர் மொஹைடீன், 1976ம் ஆண்டு யாழ்ப்பாணம் திறந்த பல்கலைக் கழகத்தில் ஹோமியோபதி வைத்தியத்துறையில் முடித்துள்ள டிப்ளோமா கற்கை நெறியினை வைத்தும் (RHMP Reg-176), அதற்கு பிற்பாடு ராஜகிரிய வைத்தியசாலையில் ஆயுர்வேத வைத்தியதுக்கான டிப்ளோ`மாவை வைத்தும் (RAMP Reg-10890) சட்டரீதியாக எனது வைத்திய சேவையினை கல்குடா மக்களுக்கு தனது இறுதி மூச்சு வரை செய்து வருகின்றேன் எனக் கூறியதுடன், தான் எப்போதும் அல்லாஹ்வில் அதிகம் நம்பிக்கை வைத்தவன் என்றும் அவன் எப்போதும் தன்னை கைவிட்டதில்லை எனவும் அல்லாஹ்வை ஞாபகப்படுத்திக் கொண்டார்.
இவ்வாறு 1978ம் ஆண்டு வைத்திய சேவையினை அடிப்படையாக கொண்டு ஓட்டமாவடியில் வசித்துவரும் டாக்கர் முஹைதீன் காத்தான்குடியை சேர்ந்த மீராசாஹிப் ஹதீஜா பீவி என்ற பெண்மனியை திருமணம் முடித்ததன் பலனாக நான்கு பெண் பிள்ளைகளும் இரண்டு ஆண் பிள்ளைகளும் உள்ளனர். இந்த பிள்ளைகள் அனைவரும் கல்குடாவிலே பிறந்துள்ளார்கள் என்பது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். இவ்வாறு கல்குடா சமூகத்தின் முகிய தேவையாக அக்காலகட்டத்தில் கருதப்பட்ட மருத்துவத்தில் பாரியபங்கினை வகித்துள்ள டாக்டர் மொஹைதீன் அக்கால கட்டத்தில் கல்குடாவில் நடக்கின்ற பாடசலை விளையாட்டுப் போட்டிகள், பொது வைபவங்கள், விழாக்கள் என்பவற்றுக்கு வைத்தியர் என்ற முறையில்அழைக்கப்பட்டு கெளரவிக்கப்படுவார்கள். ஆனால் இன்று இவரை கல்குடா சமூகம் விளையாட்டுப் போட்டிகள், பொது விழாக்கள் என்று வரும் போது கண்டு கொள்வதில்லை என்பதை நினைக்கும் போது எழுந்த மன வேதனையும் ஒரு காரணமாகவே அமைகின்றது நான் இக்கட்டுரையை எழுதுவதற்கு.
கடைசியாக 1990 காலப்பகுதியில் கல்குடா பிரதேச மக்கள் யுத்தசூழ்நிலை காரணமாக தங்களது வயல் நிலங்களில் வேளாண்மையினை செய்யமுடியாதவர்களாகவும், வெளிப்பிரதேசங்களுக்கு சென்று வியாபாரம் செய்ய முடியாதவர்களாகவும் இருந்த காரணத்தினால் பொருளாதாரத்தில் பெரிதும் பின்னடைவை சந்தித்து வறுமை தலைவிரித்தாடும் வாழ்க்கை நிலவரத்துக்கு தள்ளப்பட்டிருந்தார்கள். ஆனால் காத்தன்குடி மக்களோ பிறக்கும் போதே வியாபார கலைவித்தையுடன் பிறக்கின்றவர்கள் என்றபடியினால் அக்காலகட்டத்தில் கல்குடாவில் அதிலும் முக்கியமாக ஓட்டமாவடி பிரதேசங்களில் வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்களாக காணப்ப்ட்டனர். அவ்வாறு அன்று வறுமை நிலைக்கு கல்குடா மக்கள் தள்ளப்பட்ட சூழ்நிலையின் காரணத்தினால் கல்குடா மக்களின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் கல்குடா முக்கியஸ்தர்களால் கல்குடாவில் வியாபாரம் செய்துகொண்டிருந்த காத்தான்குடி வியாபரிகள் தங்களுடைய ஊர்களுக்கு திரும்பி செல்லக்கூடிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். ஆனால் அன்று டாக்டர் மொஹைதீனின் வைத்திய சேவை கல்குடா மக்களுக்கு பெரும் அத்தியவசிய தேவையாக இருந்ததினாலும், அவர் தக்கசமயத்தில் கல்குடா மக்களுக்கு செய்த சேவையின் வரலாற்று யதார்தத்தினாலும் இன்றும் கல்குடாவிலே வாழ்ந்து வருகின்றமையே எனக்கு இந்த கட்டுரைக்கு ** கல்குடா சமூகத்துக்கு காத்தான்குடி மண் ஈன்றெடுத்த டாக்டர் மொஹைதீன் ** என்ற தலையங்கத்தினை இடவைத்தது.
இவ்வாறு கல்குடாவில், அதிலும் முக்கியமாக ஓட்டமாவடி மக்களுக்கு வரலாற்றில் உண்மைக்கு நியாயமாகும் காத்திரமான சேவையினை செய்த, செய்து கொண்டிருக்கும் டாக்டர் மொஹைதீனிடம் நான் கண்ட முக்கிய பண்புகளில் எனக்குப்பிடித்தது அவர் தொழுகைகளை இமாம் ஜாமத்துடன் தொழுபவராக இருந்தாலும், ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாயலில் தொழுவிக்கப்படும் எல்லா ஜனாஸா தொழுகைகளிலும் கலந்து கொண்டு இஸ்லாத்தின் பர்ளு கிபாய என்ற கடமையினை நிறைவேற்றக்கூடிய ஒரு நல்ல மனிதராக இருப்பதனை அவருடைய அதியுன்னத பண்பாகவே பார்க்கின்றேன். ஆகவே டாக்டர் மொஹைதீனை கல்குடா சமூகம் ஆரம்ப காலத்தில் எவ்வாறு விழாக்களுக்கெல்லாம் அழைப்பித்து கெளரவப்படுத்தியதோ அது போலவே எமக்கு கிடைத்த இந்த நல்ல மனிதரை கல்குடாவில் நடக்கின்ற அனைத்து விழாக்களுக்கும் அவரையும் அழைப்பித்து கெளரவப்படுத்த வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். வரலாறுகள் அழிவதுமில்லை, அவைகள் அழிக்கப்படுவதுமில்லை. ஆனால் அவைகள் மறக்கப்படுகின்றன.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment