பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனைச் சேர்ந்த டாக்டர் கே.எம்.அஸ்லம் பொது மருத்துவத் துறையில் நிபுணத்துவக் கற்கையைத் தொடர்வதற்கு இந்தியா அரசின் புலமைப்பரிசில் பெற்று அண்மையில்(05-11-2014) இந்தியா சென்றுள்ளார். இந்தியா பெங்ளுரில் உள்ள ராஜீவ் காந்தி பல்கலைக் கழகத்தில் பொது மருத்துவத் துறையில் நிபுணத்துவக் கற்கையைத் தொடர்வதற்கு இவர் தெரிவு செய்யப்பட்டள்ளார்.
இவர் 94ம்,95ம் கல்வியாண்டில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உண்ணாட்டு மருத்துவக் கல்வி நிறுவனத்தில் மருத்துவத்துறையில் பயின்று பட்டம் பெற்றுள்ளார். இதே காலப்பகுதியில் கொழும்பு பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் மருந்தியல் துறையிலும்; டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார்.
இதன் பின்னர் 2012ம்,2013ம் கல்வியாண்டில் கொழும்பு பல்கலைக் கழக பட்டப் பின்படிப்பு டிப்ளோமா கற்கை நெறியையும் மேற்கொண்டுள்ளார். கிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள மருதமுனை ஆயுள்வேத வைத்திய சாலையில் 2008ம் ஆண்டு தொடக்கம் இந்தியா செல்லும் வரை வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றியுள்ளார்.
இவர் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும்,இலங்கை மருந்தகவியல் சங்கத்திலும்,இலங்கை நீரழிவு சங்கத்திலும் ஆயுட்கால உறுப்பினரும், ஓய்வு பெற்ற அதிபர் காதர் மீரா, றகீமா தம்பதியின் புதல்வருமாவார்.
.jpg)
0 comments :
Post a Comment