தம்புள்ளையில் தோன்றிய அசாதாரண நிலைமைகளின் பின்னணிதான் என்ன?




ம்புள்ள நகரிலுள்ள புடவை வர்த்தக நிலையம் ஒன்றுக்குச் சென்ற யுவதி ஒருவரை அந்த வர்த்தக நிலையத்தைச் சேர்நத சில சிற்றூழியர்கள் பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்தனர் எனக் கூறி பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறப்படும் யுவதி உடனடியாக வெளியே கூக்குரல் இட்டுள்ளார். இதனால் அங்கு மக்கள் கூடியதனையடுத்து அங்கு அசாதாரண நிலைமைகள் தோன்றின. உடனடியாக அங்கு விரைந்த தம்புள்ளை பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

இருப்பினும் அங்கு மீண்டும் பதற்ற நிலை தோன்றியது. ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யுமாறும் கடையை மூடுமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இவ்வாறானதொரு நிலையில் குறித்த கடையில் பணி புரியும் சம்பவத்துடன் தொடர்புடைய சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேபோன்றதொரு சம்பவம் பதுளையிலும் அண்மைக் காலத்தில் இடம் பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
படங்கள் நன்றி நெத் எப்.எம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :