மக்கள் நண்பன் அன்சார்-
தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்களை விட்டு விட்டு தாய்மார்கள் வெளிநாடு செல்வது நம் நாட்டில் அதிலும் முஸ்லிம் கிராமங்களில் அதிகரித்துள்ளது.
இதனால் பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளன. அவற்றினை நாம் நாளாந்தம் செய்திகள் வாயிலாக அறிந்த வண்ணம் இருக்கின்றோம்.
பிள்ளைகளை விட்டு விட்டு தாய்மார் வெளிநாடு செல்வதால் சிறார்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது.
தாய் வெளிநாடு சென்று பல வருடங்கள் கழிந்த பின்னர் தனது தாயின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஒருவன் தாய் வராத காரணத்தால் தனது உயிரை மாய்த்துக்கொள்ள எத்தனித்திருந்த சம்பவம் ஒன்று அண்மையில் நமது நாட்டில்தான் இடம் பெற்றது இங்கு குறிப்பிடத் தக்கது.
எமது பகுதியில் பல தாய்மார்கள் கணவன், குழந்தைகளையெல்லாம் விட்டுவிட்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு 10,000 தொடக்கம் 15,000 ரூபா வரைக்குமான சம்பளத்துக்காக செல்கின்றார்கள். இதனால் இங்கு குழந்தைகள் பரிதவிப்பது மாத்திரமல்லாமால் வெளிநாடு செல்லும் பெண்களும் பல துன்பங்களை அந்நாடுகளில் அனுபவித்து வருகின்றார்கள்.
மேலும் இவ்வாறு தனிமைப்படுத்தப்படும் இங்குள்ள கணவன், பிள்ளைகள் தவறான செயற்பாடுகளுக்குச் செல்லக்கூடிய சூழல் உருவாகின்றது. அதுமட்டுமல்லாமல் சிறுவர் துஷ்பிரயோகங்களும் இடம்பெறுகின்றன.
எனவே, நம் பிரதேசங்களில் உள்ள எந்த தாய்மாரும் மத்தியகிழக்கில் கையேந்தக் கூடாது மாறாக தாய்மாருக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் இவர்களுக்கு அதிகளவு நிதிகளை, கடனுதவிகளையும் வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.
பெண்கள் தங்களுடைய வாழ்வாதாரத் திட்டத்தை அடையாளப்படுத்தி சமுர்த்தி திட்டத்தினூடாகவும் சமூகசேவைத் திணைக்களமூடாகவும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களுடாக வேண்டியளவு நிதிகளைப் பெற்று தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மேன்படுத்த வேண்டும். இதனூடாக வெளிநாடு செல்லாமல் இங்குள்ள வளங்களைப் பயன்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு தாய்மார்கள் தன் சொந்த ஊரிலேயே இருப்பதனால் குழந்தைகளை சிறந்த முறையில் கற்பித்து வழிநடாத்தலாம் இதனூடாக அன்பு, விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு, ஆதரவு, பெருகி சிறந்த முறையில் வாழலாம். குழந்தைககள் நமக்குக் கிடைக்கின்ற செல்வங்கள் அந்த செல்வங்கள்தான் எதிர்கால வளர்ச்சிக்கும் பயன்பாடுகளுக்கும் உகந்த சக்தியாக மாறும்.
எனவே, தங்களது குழந்தைகளை நல்ல பிரஜைகளாக உருவாக்க வேண்டுமாக இருந்தால். பெற்றோர்கள் சிறந்த முறையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும். அவர்களை விட்டு விட்டு வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது, இதனை உங்களது பிள்ளைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு சிந்தியுங்கள்.

0 comments :
Post a Comment