ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக உறுப்பினரான இசைக்கோ என்.எம். நூர்தீனுக்கான இரங்கல் கூட்டம் எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பில் இடம்பெற்றவுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டிலான இந்த நிகழ்வு இல. 149, மாளிகாகந்தை வீதி மருதானை எனும் முகவரியிலுள்ள அஷ்ஷபாப் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றவுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் கலைவாதி கலீல் ஆகியோர் இரங்கலுரை நிகழ்த்தவுள்ளனர்.
கடந்த பல தசாப்பந்தங்களாக இஸ்லாமிய இசை உலகுக்கு சேவை புரிந்து கடந்த ஓகஸ்ட் மாதம் காலஞ்சென்றார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வளர்ச்சிக்கு இவர் முன்னின்று செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment