மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கல்முனை மாநகர பிரதான பஸ் நிலைய வளாகத்தை உடனடியாக சீரமைக்க மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்து வருகின்ற மழை காரணமாக கல்முனை மாநகர பிரதான பஸ் நிலைய வளாகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் பயணிகளும் பஸ் நிலைய நிர்வாகத்தினரும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு முதல்வரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று அதிகாரிகள் சகிதம் இன்று மாலை ஸ்தலத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்த முதல்வர், பஸ் நிலைய வளாகத்தை உடனடியாக சீரமைக்குமாறு பணிப்புரை விடுத்ததுடன் அதற்கு வேண்டிய அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.
இதன்போது கல்முனை மாநகர சபையின் சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.ஏ.மஜீத், முதல்வரின் செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக் உள்ளிட்ட அதிகாரிகள் பிரசன்னமாகி இருந்தனர்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment