நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கப்போவதாக நாட்டுக்கு ஜனாதிபதி அறிவிக்க வேண்டும்!

னாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் முடிவில் எதுவித மாற்றமுமில்லை. இருந்தும் அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கப்போவதாக நாட்டுக்கு அறிவிக்க வேண்டுமென ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இடதுசாரி கட்சிகளான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி லங்கா சம சமாஜக் கட்சி ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகியன அரசயலில் இடம்பெற்றுள்ள அதிரடி மாற்றங்களின் பின்னரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கப் போவதாக தெரிவிக்கின்றன.

லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும் சிரேஷ்ட அமைச்சருமான திஸ்ஸ விதானகவிடம் இது தொடர்பாக தொடர்பு கொண்டு கேட்ட போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவதில் எதுவித மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :