இன்று முதல் ஜனாதிபதித் தேர்தல் தபால் வாக்கு விண்ணப்பம் ஏற்பு!

எம்.ஏ. தாஜகான்-

ழாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரகடனம் மற்றும் திகதி என்பன நிர்ணயிக்  கப்பட்டிருக்கும் நிலையில், அத்தேர்தலுக்கான தபால் வாக்களிப்புக்கான விண்ணப் பங்களை  ஏற்கும் நடவடிக்கைகளை தேர்தல்கள் திணைக்களம் ஆரம்பித்திருப்பதாக அறிவித்துள்ளது. 

இத்தேர்தல்  பணிக்கான ஆட்களைத் திரட்டும் பணிகளில் தேர்தல் கள் திணைக்களம் முன்னதாக ஈடுபட்டுவருவதாகவும்  தெரிவித்துள்ளது.

ஏழாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரகடனம் ஜனாதிபதியினால் 20ஆம் திகதி  வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, டிசம்பர் 08ஆம்திகதி வேட்புமனு ஏற்றுக் கொள் ளப்படும்  என்றும், ஜனவரி 08ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல்கள்; ஆணையாளர் 21ஆம்  திகதி அறிவித்திருந்தார்.

ஏழாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல்தினம் அறிவிக்கப்பட்டதையடுத்து,அத் தேர்தலுக்கு  தபால் மூலம் வாக்களிக்கப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி யும் 22ஆம் திகதி தேர்தல்கள் ஆணையாளரால் வெளியிடப்பட்டிருக்கின்றது. 

இதன் பிரகாரம்  திங்கள்கிழமை(24)முதல் விண்ணப்பங்கள் ஏற்கப்படவுள்ளது. ஏழாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு 2014ஆம் ஆண்டுக்கான வாக்கா ளர்  பட்டியலின்படி நடைபெறும் என 23ஆம்திகதி அறிவித்துள்ள தேர்தல் திணைக் களம்,  இத்தேர்தலில் வாக்களிக்க ஒருகோடியே 50இலட்சத்து 44ஆயிரத்து 490பேர் தகுதி  பெற்றுள்ளனர் என்றும் இது முன்னரைவிட 292.322அதிகம் எனவும், இத் தேர்தலுக்கு,  275கோடி ரூபாய்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாவும் தெரி வித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :