அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த ஒன்று கூடலும் புதிய நிருவாக சபைத் தெரிவும்!

 ஸிறாஜ் ஏ.மனீஹா-

ம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த ஒன்று கூடலும் புதிய நிருவாக சபைத் தெரிவும் கல்முனை அல் பஹ்றியா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை  உறுப்பினர் ஏ.எம்.பறகதுள்ளாஹ் கலந்து கொண்டு அனைத்து ஊடகவியலாளர்களையும் கௌரவிக்கும் முகமாக  அன்பளிப்பாக பிரயானப் பைகளை வழங்கி வைத்தார்.

இதன் போது மரணித்த ஊடகவியலாளர்களுக்கான துஆப் பிராத்தனை இடம்பெற்று ஊடகவியலாளர் அமைப்பினால்  சமூகசேவையாளர்கள் பலர் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் இவ்வாண்டிற்கான புதிய நிருவாக சபைத் தெரிவும் இடம்பெறறது. 

மீண்டும் அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் புதிய தலைவராக கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸதீனும்,  செயலாளராக ரீ.கே.றஹூமதுள்ளா, உப செயலாளராக இம்போட் மிரர் இணையத்தளத்தின் பணிப்பாளரும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான எஸ்.எல்.முனாஸ், பொருளாளராக யு.எம்.இஸ்ஹாக்  உட்பட 9பேர் கொண்ட நிருவாக சபையுடன் 3பேர்  கொண்டஆலோசனை சபை உறுப்பினர்களும்; தெரிவு செய்யப்பட்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :