ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் -
நிந்தவூர் பிரதேசத்தில் கடந்த வருடம் சிறுபோகத்தின்போது நீர்ப்பற்றாக்குறை காரணமாக விவசாயம் செய்யப்படாது பாதிக்கப்பட்ட வயற் சொந்தக் காரர்களுக்கு, அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்வைத்த வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட நஷ்ட ஈட்டுக்கான விண்ணப்பப்படிவங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்தில் இடம் பெற்றது.
நிந்தவூர்ப் பிரதேச கமநலசேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஹாலிக் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சீ.பைசால் காசீம் பிரதம அதிதியாகவும், நிந்தவூர் பிரதேச சபைத் தலைவர் எம்.ஏ.எம்.தாஹீர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு, விவசாய நிலச் சொந்தக் காரர்களுக்கு நஷ்டஈட்டு விண்ணப்பங்களை வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் 1122 ஏக்கர் நெல்வயற் சொந்தக் காரர்களுக்கு நஷ்டஈட்டு விண்ணப்பங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இங்கு பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் உரையாற்றுகையில்:- ' நாங்கள் அரசாங்கத்தில் பங்காளிகளாக இணைந்து கொண்டதனால்தான் இன்று எமது பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்திகளைச் செய்து கொண்டிருக்கிறோம். அண்மையில் கூட ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் 25 மில்லியன் ரூபா அபிவிருத்திக்காக வழங்கப்பட்டது. இதனை ஒரு சிலர் எனது பெயரைக் களங்கப்படுத்த வேண்டுமென்றநோக்கில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்காக பணத்தினைப் பெற்று வருகிறேன் எனத் தெரிவிக்கின்றனர். இது முற்றிலும் தவறானது'. எனத் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment