ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்த்துப்போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யார் என்பது தொடர்பிடும் கடந்த சில நாட்களாக இலங்கை அரசியலில் சூடு பிடித்திருந்தது.
இன்றைய தினம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல் திகதி (2015 ஜனவரி 08) மற்றும் எதிர் கட்சிகளின் போது வேட்பாளர் தொடர்பிலும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
இன்றைய தினத்தில் பல்வேறு தரப்பினரும் எதிர்பார்போடு காத்திருந்த பொது வேட்பாளர் வெளிப்பட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளரான மைத்திரி பால சிறிசேன எதிர்கட்சிகளின் போதுவேட்பாளராகஇன்று மாலை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டார்.
அவருக்கு ஐக்கிய தேசியக்கட்சி பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக இன்று இடம் பெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் திஸ்ஸ அத்தநாயக்க உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மைத்திரி பால சிறிசேன வுக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கிய பொதுமக்கள் பட்டாசுகள் கொளுத்தி ஆரவாரம் செய்ததாக இலங்கையின் முன்னணி ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. (காணொளிகள் உட்பட)
இருந்த போதிலும் அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்கின்ற பல பிரதேசங்களில் பொது வேட்பாளராக மைத்திரி பால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டார் என்ற அறிவிப்பு வெளியாகி இதுவரை (இந்த செய்தி எழுதப்படுகின்றவரை) எந்தவிதமான ஆதரவு தெரிவித்தல் சம்பவங்களும் இடம்பெற்றதாக அறியக்கிடைக்கவில்லை.

0 comments :
Post a Comment