இறக்காமம் சன்சீர்-
வாங்காமம் மக்களின் குடிநீர் பிரச்சினைத் தேவைகளை இம்போட்மிரர் இணையத்தளம் சுட்டிக்காட்டியதனைத் தொடர்ந்து இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் எம்.எல். முஸ்மி வரட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான தீர்வினை எடுக்க உடனடியாக பணியில் இறங்கியதற்கமைய 2014.11.11 நண்பகல் 12.00 மணியளவில் எம்.எல். முஸ்மி பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் அவர்களின் உதவியுடன் 2014.11.12 நண்பகல் 12.00 மணி முதல் வாங்காமம் கிராமத்துக்கு தற்காலிக குடிநீர் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் வாங்காமம் கிராம மக்களுக்கு நிரந்தர குடிநீர் வசதி கிடைக்கும் வரை இச் சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.
இதற்காக சம்மந்தப்பட்ட மேல் அதிகாரிகளிடம் பேசியிருக்கிறேன் எனவும் பிரதேச சபை உறுப்பினர் எம்.எல். முஸ்மி இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.
மேலும் இம்போட் மிரரின் வேன்டுகோளுக்கு இணங்க இக் குடிநீர் பிரச்சிணையை கவனத்திற் கொண்டு தீர்த்து வைத்தமைக்கு இம்போட் மிரர் சார்பாக பிரதேச சபை உறுப்பினர் எம்.எல். முஸ்மி மற்றும் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றோம்.

0 comments :
Post a Comment