அஷ்ரப் ஏ சமத்-
மாக்கோலை அநாதை இல்லத்தில் கடந்த ஹஜ்பெருநாளைக்கு முன்பு 69 ஆடுகளை அருப்பதற்கு கொண்டுவந்ததாகக் கூறி தொம்பே பொலிசார் சம்பந்தப்பட்டடவர்களையும் 69 ஆடுகளையும் கைது செய்து அன்று பூகொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர். அத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் பினை செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் 69 ஆடுகளையும் கால் நடைகள் திணைக்களத்திடம் கையளித்திருந்தனர். இவ் ஆடுகள் 14 இலட்சம் பெறுமதி வாய்ந்தது.
இன்று காலை பூகொடை நீதிமன்ற்தில் இவ் வழக்கு மீள விசாரணை நடாத்த எடுத்துக்கொண்ட விடயத்தில் இஸ்லாமிய மதம் சம்பந்தமாகவும் முஸ்லீம்களின் கலை கலாச்சாரம் பற்றி அ டிக்கடி நீதிமன்றங்களில் தோன்றி இலவசமாக வாதிடும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுகையிர் தலைமையிலான சட்டத்தரணிகளும் இன்றும் பூகொடை நீதிமன்றத்தில் மேற்படி வழக்கு சம்பந்தமாக வாதாடினார்கள். இவ் வழக்கினை விசாரித்த பூகொட நீதிமன்ற மஜிஸ்ரேற் நீதாவான் மேற்படி 69 ஆடுகளையும் மாக்கோலை அனாதை இல்லத்திடம் உடனடியாக ஒப்படைக்குமாறு தொம்பே பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இவ் வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி சப்றாஸ் கம்சா, சஞ்சே ரணதுங்க, ஆகியோரும் ஆஜராகினார்கள்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment