பொதுவேட்பாளருக்கு தயா கமகே தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்!

பொது வேட்பாளர் குறித்து ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானத்துக்கு அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சியின் பொது அபேட்சகராக ஸ்ரீ.ல.சு.கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிரிசேனவை தெரிவு செய்ய வேண்டும் என ஐ.தே.க.யின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனைக்கே இவர் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

பொது வேட்பாளராக ஐ.தே.க.யிலிருந்தே ஒருவர் வரவேண்டும். அது ரணில் விக்கிரமசிங்கவாக இருக்க வேண்டும். அல்லது சஜித் பிரேமதாசவாக அமையவேண்டும் எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான சிரேஷ்ட உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தை அங்கீகரித்துள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக முகம்கொடுக்க மைத்திரிபால சிரிசேனவுக்கு தகைமையுள்ளதாக சிரேஷ்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :