"உங்கள் குருதி அழுத்தத்தை குருதி அமுக்கத்தை சரியாக அளவு செய்து உயர் குருதி அமுக்கத்தை கட்டுப்படுத்தி நீண்ட நாள் வாழுங்கள்" எனும் தொனிப் பொருளில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சகீலா இஸ்ஸதீன் அவர்களின் பணிப்புரையில் சர்வதேச குருதி அழுத்த தினத்தையொட்டி சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் பரிசோதனை நிகழ்வுகள் இடமபெற்றது.
எமது சமூகத்தில் இளையவர் முதியவர் என்ற பாகுபாடு இன்றி பல தீங்குகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன இதில் பிரதானமாக மாரடைப்பு பக்கவாதம் மூளையினுள் குருதிக் குழாய்களில் ஏற்படும் வெடிப்பு சிறுநீரக செயலிழப்பு போன்றவற்றை குறிப்பிட முடியும்.
இவற்றினால் குறிப்பிட்ட நபருக்கும் அவரது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நாட்டுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்புக்கள் ஏற்படுகின்றன.
எனவே எமது உடலில் குருதி அமுக்கத்தினை அடிக்கடி செக் பண்ணிக் கொள்வதுடன் உயர் குருதி அமுக்கமுள்ளவர்கள் அதற்கான சிகிச்சையினை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும்.
உங்களது குருதி அமுக்கம் சாதாரண நிலைக்கு வந்துவிட்டது இனிமேல் மருந்து மாத்திரைகள் எதனையும் நீங்கள் பயன்படுத்த தேவையில்லை என்ற வைத்திய ஆலோசனை உங்களுக்கு கூறப்படும் வரை ஒருபோதும் உங்களது மருந்துகளை கைவிட வேண்டாம்.
ஏதோ ஒரு சில காரணங்களுக்காக உயர்குருதியமுக்கம் உள்ளவர்கள் தங்களது மருந்து மாத்திரைகளை தொடர்ச்சியாமல் உள்ளெடுக்காமல் இருந்துவிட்டு திடீரென நோய்வாய்ப்பட்டு மீள முடியாத சிக்கல்களுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதை நாம் எமது கண்கூடாக கண்டு கொண்டிருக்கின்றோம்.

0 comments :
Post a Comment