எம்.வை.அமீர்-
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வருடாந்த விஞ்ஞான ஆராய்ச்சி அமர்வு இன்று (2014-11-12 )தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி சபீனா இம்தியாஸ் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. குறித்த 3 வது வருடாந்த விஞ்ஞான ஆராய்ச்சி அமர்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாயில் கலந்து கொண்டார். இதேவேளை விஞ்ஞான ஆராய்ச்சி அமர்வின் விசேட பேச்சாளராக பேராசிரியர் வீராஞ்ச கருணாரத்தின கலந்து விசேட சொற்பொழிவாற்றினார்.
நிகழ்வின் ஏற்பாட்டாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல். ஹனீஸின் வழிநடத்தலின் கீழ் இடம்பெறும் இந்நிகழ்வில் 30க்கு மேற்பட்ட ஆராச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டு விவாதிக்கப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment