அகில இலங்கை ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் நிந்தவூரைச் சேர்ந்த ஆசிரியர் சாதனை!


சுலைமான் ராபி- 

ம்மாதம் 10, 11ம் திகதிகளில் நுவரெலிய மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வந்த அகில இலங்கை ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் கல்முனை கல்வி வலயத்தின் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.எம். இப்றாஹிம் (PT கபூர்) சிறந்த விளையாட்டு வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

51 தொடக்கம் 55 வயது வரைக்குமான பிரிவுப் போட்டியில் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சிகளில் தங்கப்பதக்கத்தினையும், 400 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் வெள்ளிப் பதக்கத்தினையும் பெற்று கிழக்கு மாகாணத்திற்கும், கல்முனை கல்வி வலயத்திற்கும், தனது சொந்த ஊரான நிந்தவூரிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இதேவேளை கடந்த காலங்களில் நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிய இவர் அம்மாணவர்களை தேசிய ரீதியில் கொண்டு சென்று வெற்றி பெற வைத்த பெருமையும் இவரையே சாரும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :