ஜனாதிபதித் தேர்தலில் முன்னெடுக்கவுள்ள நிலைப்பாடுகள் குறித்து ஜாதிக ஹெல உறுமய கட்சிக்கும் பொதுபல சேனாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹெல உறுமய கட்சி அரசாங்கத்திலிருந்து விலகியது முதல் இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதாக சிங்கள ஊடகமொன்ற அறிவித்துள்ளது.
பொதுபல சேனா அமைப்பு ஹெல உறுமயவின் யோசனைகளை ஏற்று செயற்படத் தயார் எனின், தாம் அவ்வமைப்புடன் இணைந்து செயற்படத் தயார் என ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதேபோன்று, இன்னும் பல கட்சிகளுடனும் ஹெல உறுமய தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, தாம் பல அமைப்புக்களுடன் இதுவரையில் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment