அண்மையில் கொழும்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கலந்துரையாடலின் ஒலிப்பதிவு புலனாய்வுப்பிரிவினரால் சிலருக்கு கிடைத்தது என்று பொய்யான புளுகு மூட்டைகளைக் கொட்டியுள்ளதனை சில இணையத்தளங்களில் காணக்கிடைத்தது. இந்த இணையத்தளங்களின் உரிமையாளர்களின் அப்பாவித்தன்மையையும், வக்கிரப்புத்தியையும், வதந்திகள் பரப்பும் கேவலத்தையும் பார்க்கும் போது வெட்கப்படுவதைத் தவிர வேறும் ஒன்றும் செய்ய முடியாது. என்றார் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும் ஊடகப்பணிப்பாளாருமான ஹனீபா மதனி.
இணையத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி, ஒலிப்பதிவு சம்மந்தமாக இம்போட்மிரர் இணையத்தள செய்திப்பிரிவு ஊடகப்பணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது .
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:
கடந்த 28.11.2014 வெள்ளிகிழமை கட்சியின் தலைமையகமான தாருஸ்சலாமில் முஸ்லிம் காங்கிரசின் கொழும்பு அமைப்பாளார்களுடன் கட்சியின் தலைவர் ரவூர் ஹக்கீம், செயலாளர் நாயகம், எம்.ரி.ஹஸன் அலி, பிரதிச் செயலாளர் சட்டத்தரணி நிஷாம் காரியப்பர், கட்சியின் அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், ஊடகப்பணிப்பாளரான நானும் அந்நிகழ்வில் கலந்து கொண்டோம் அங்கு இடம்பெற்ற கருத்துக்களையே அங்கிருந்தவர்கள் ஒலிப்பதிவு செய்துள்ளனர்.
அந்த ஒலிப்பதிவைக்கேட்கின்ற அனைவருக்கும் நன்றாகப் புரிந்திருக்கும் அங்கு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் அதில் பேசவில்லை. வேறு குரல் மதிக்க முடியாத சிலர்தான் அதில் பேசியுள்ளனர். எனது குரலும் அந்த ஒலிப்பதிவில் கேட்பதனை நீங்கள் அறிவீர்கள். அப்படியானால் அந்த ஒலிப்பதிவு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் சந்திப்பில் எடுத்தவை அல்ல.ஏன் என்றால் அந்த கூட்டத்துக்கு எனக்கும் அழைப்பு இல்லை எனவே அது முற்று முழுதாக பொய்யான வதந்தியைக்கிழப்பு ஒரு ஒலிப்பதிவு, முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் கதையாக இது இருக்கிறது எனவே பொய்யான வதந்திகளை கண்டு, கேட்டு யாரும் ஏமாற வேண்டாம் என்று கடியின் ஆதரவாளர்கள், நண்பர்களைக்கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
குறிப்பிட்ட போலியான ஓடியோ... இது
குறிப்பிட்ட போலியான ஓடியோ... இது
.jpg)
0 comments :
Post a Comment