இம்போட் மிரர் ஊடக வலையமைப்பின் மாபெரும் பரிசளிப்பு நிகழ்வும் மூத்த ஊடகவியலாளர்கள் கௌரவிப்பும்!

ஸிறாஜ் ஏ மனீஹா-

ம்போர்ட் மிரர் ஊடக நிறுவன ஏற்பாட்டில் மாபெரும் பரிசளிப்பு நிகழ்வும் மூத்த ஊடகவியலாளர்கள்  கௌரவிப்பு விழாவும் 2014.11.09ம் திகதி மாலை 4.00 மணிக்கு அட்டாளைச்சேனை லொயிட்ஸ்  மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இம்போர்ட் மிரர் ஊடக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்  அமைப்பின் உப செயலாளரும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான எஸ்.எல்.முனாஸ் ஜே.பி தலைமையில்  நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரம,; சுதேச வைத்தியம்,சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு, சமூக  சேவைகள் கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத்துறை, தொழிற் பயிற்சிக் கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம  அதிதியாகவும், 

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் பிரதேச செயலகங்களுக்கான அபிவிருத்திக்  குழத்தலைவருமான பீ.எச்.பியசேன, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நசீர்,ஏ.எல்.தவம், சட்டத்ரணி ஆரிப் சம்சுதீன் உட்பட பிரதேச சபை தவிசாளர்கள் பிரதேச சபை  உறுப்பினர்கள்,சமுகசேவையாளர்கள்,ஊடகவியலாளர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :