அஷ்ரப் ஏ சமத்-
இந்த நாட்டில் வாழும் முஸ்லீம்கள் 70 வீதமானவர்கள் வருமைக்கோட்டின்; கீழ்தான் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் எமது சமுகம் வர்த்தக சமுகம் பணக்கார சமுகம் என தப்புக் கணக்கு போட்;டுள்ளனர். எமது சமுகத்தின் உள்ளே சென்று பார்த்தால் நாம் எந் நிலையில் உள்ளோம் என தெரியவரும். நாம் கல்வியில், வீடில்லாமை அரச தனியார் தொழில,; வியாபாரத்தில், நலமான வாழ்க்கையிலும், எமது சமுகம் பின்தங்கியே காணப்படுகின்றது.
எனது முஸ்லீம் ஸ்டடி சேக்கில் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து இந்த 6 வருடத்திற்குள் ஒரு நாளைக்கு 50க்கும் மேற்பட்ட முஸ்லீம் பெண்கள் என்னை வந்து சந்திக்கின்றனர். என முஸ்லீம் கல்வி வட்டத்தினை தலைவி திருமதி அமீனா பாயிஸ் முஸ்தபா தெரிவித்தார்.
கொழும்பு டி.ஆர்.விஜயவர்த்தன மாவத்தையில் உள்ள முஸ்லீம் ஸ்ட்டடி சேக்கிலில் 175 முஸ்லீம் யுவதிகளுக்கு தொழில்பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும்போதே ஆமீனா பாயிஸ் முஸ்தபா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந் நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மற்றும் அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
அங்கு ஆமீனா தொடர்ந்து உரையாற்றுகையில் -
எமது சமுகத்தில் வாழும் முஸ்லீம் பெண்கள் தாய்மார்கள் தமது வழ்க்கையில் பல பாரிய பிரச்சினைகள் முகம்கொடுத்து வாழ்ந்து வருகின்றனர். திருமணம் முடித்துவிட்டு தமது கணவர் பிரிந்து வேறு திருமணம் முடித்திருப்பார். அவருக்கு பிறந்த குழந்தைகளையும் 4 அல்லது 5 பிள்ளைகள் அதுவும் குமர் பிள்ளைகள் வைத்துக்குக் தாய்மார்கள் படும் கஸ்டம் சொல்லொன்னாத் துண்பம.; இவ்வாறன நிலைமைகள் மேல்மாகணத்தில் வாழும் முஸ்லீகளிடையே நிறைய காணப்படுகின்றது.
தமது கணவர் கெட்ட செயல்களில் ஈடுபட்டிருப்பார். அல்லது சிறையில் இருப்பாh. நோய்வாய்பட்டிருப்பார். இறந்திருப்பார். அல்லது வெளிநாடு சென்று அந்த நாட்டிலேயே தங்கி வராமல் இருந்திருப்பார். குடும்பத் தலைவன் ;இல்லாத குடும்பங்கள் படுகின்ற கஸ்டங்கள் இங்கு சொல்ல முடியாது. இருக்க வீடு இல்லை. தமது பிள்ளைகளை திருமணம் முடித்துக்கொடுக்க வசதி; இல்லை. இப்படி பல பிரச்சினைகள் எமது சமுகத்தில் உள்ளன.
அதற்காகவே ஒவ்வொரு வருடமும் எமது கல்வி நிலையத்தில் 175 முஸ்லீம் பெண்கள் தொழிற் பயிற்சிகளை கற்று வெளியேறுகின்றனர். இவர்களுக்கு 10க்கும் மேற்பட்ட பயிற்சிநெறிகளை கற்பிக்கின்றோம். இப் பெண்கள் பயிற்சிகளை பயின்று சிறு கைத்தொழில்களை தமது வீட்டிலேயே இருந்து கொண்டு உழக்கின்றனர்.
இந் நிறுவனத்தின் தொழிற்பயிற்சி நிலையங்கள் கொழும்பு பாணந்துறை, காலி, வராக்கப்பொல வெலிகம கஹோட்டவிட்ட ஆகிய பிரதேசங்களிலும் ஆரம்பித்துள்ளோம். ஆயிரக்கணக்கான முஸ்லீம் பெண்கள் பாடசாலைக் கல்வியைப் முடித்து விட்டு வீடுகளில் தங்கி நிற்கின்றனர். இவர்களுக்கு இவ்வாறானதொரு பயிற்சி தொடர்வதன் ஆறுதல் அளித்துள்ளது. இதில் தான் திருமணமாகும் பெண்னும் வீட்டில் இருந்து கொண்டு உழகை;கும் பெண்னைத் தேடி இங்கு வந்து விசாரித்து முஸ்லீம் இளைஞர்கள் திருமண முடிக்கின்றனர். அவர்கள் உழகை;கும் அல்லது கடைகளில் பெறும் வருமாணம் போதாது எனத் தெரிவிக்கின்றனர். என ஆமீனா முஸ்தபா தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment