இறக்காமம் சன்சீர்-
இறக்காம பிரதேச சபையின் எதிர்கட்சித்தலைவர் ஜே.கே.ரஹ்மானின் அழைப்பை ஏற்று நேற்று 12.11.2014 மாலை 5.30 மணியளவில் இறக்காமம் மக்கள் வங்கிக்கிக்கு அருகாமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்புக்காக சிரேஷ்ட அமைச்சர் தயாரதன, பிரதி அமைச்சர் சரத் வீரசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, சிரியானி ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இந்நிகழ்வுக்கு இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் யூ.கே.ஜபீர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதன்போது தவிசாளர் ஜபீர் நாமல் ராஜபக்ஷவுக்கு நினைவுச்சின்னம் ஒன்றையும் வங்கி வைத்தார்.
இதன் போது இறக்காமம் பிரதேச சபை எதிர்கட்சித் தலைவர் ரஹ்மான் உரை நிகழ்த்தும் போது இறக்காமத்தில் புனரமைக்கப்படாமல் இருக்கும் பாதைகளை புனரமைக்க சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.




0 comments :
Post a Comment