பாறுக் சிகான்-
Mother ஸ்ரீ லங்கா ( Mother Sri Lanka Trust) அமைப்பின் குழுவினர் இன்று மாலை 4.30 மணியளவில் வடக்குத் தெற்கு உறவுப் பாலத்தை இணைக்கும் முகமாக 150 பேர் 3 நாள் பயணமாக கொழும்பிலிருந்து யாழ்தேவி ரயிலில் யாழ்ப்பாணம் வருகை தந்தனர் இவர்களை யாழ்.புகையிரத நிலையத்தில் வைத்து மங்கள வாத்தியங்கள் முழங்க யாழ்ப்பாணப் பாடசாலை மாணவர்களால் வரவேற்கப்பட்டனர்.
ரயில் இருந்து இறங்கிய Mother ஸ்ரீ லங்கா அமைப்பின் அதிகாரிகள் மற்றும் மாணவ குழுவினரை அணிவகுப்பாக வரவேற்றுக்கொண்டு வந்து தமிழ் கலாச்சார ரீதியாக புகையிரத நிலைய வாசலில் வைத்து யாழ்ப்பாண பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் அவர்களை வரவேற்று அதிகாரிகளுக்கு மாலை அணிவித்து கைகொடுத்து வரைவேற்றனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment