அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்க பேரவையின் மாவட்ட பணிப்பாளர்களுக்கான விசேட கூட்டம்


கொழும்பிலிருந்து-எஸ்.அஷ்ரப்கான்-

கில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்க பேரவையின் மாவட்ட பணிப்பாளர்களுக்கான விசேட கூட்டம் இன்று (12) காலை 9.30 மணிக்கு தற்போது பேரவையின் தலைமைக்காரியாலயத்தில் எம்.ரீ.தாஸீம் தலைமையில் இடம்பெற்று வருகிறது.

இங்கு அகில இலங்கை ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட மாவட்ட பணிப்பாளர்கள் கலந்துகொண்டு எதிர்கால பேரவையின் தொழிற்பாடு மற்றும் கிளைகளின் தொழிற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இங்கு கலந்து கொண்ட மாவட்ட பணிப்பாளர்களால் ஒவ்வொரு மாவட்டத்தினதும் கிளைகளின் பிரச்சினைகள் குறித்து விரிவாக எடுத்துக்கூறப்பட்டதுடன், அதற்கான தீர்வுகளை அமைப்பின் தேசியத் தலைவர் தாஸீம் மிக விரைவாக நிவர்த்தி செய்வதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவிதார்.

இக்கூட்டத்தில் பேரவையின் தேசிய பொதுச் செயலாளர் எம்.என்.எம். நபீல், பொருளாளர் எம்.எஸ்.எம். றிஸ்மி ஆகியோர் உட்பட முன்னாள் தலைவர்களான எம்.எஸ். றஹீம், வஹாப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :