வேண்டும் என்று கால நிர்ணயம் விதித்து வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், தனியார் காணிகளோ அரச காணிகளோ தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய அக்கறை என்று வரும்போது அங்கு விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
மேலும் வட மாகாண சபையானது இதற்கு முன்னர் நாட்டின் அரசியலமைப்புக்கு எதிராக பிரேரணைகளை நிறைவேற்றியுள்ளது. அந்தவகையில் இம்முறை நிறைவேற்றியுள்ள பிரேரணைகளும் அரசியலமைப்புக்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கும் முரணானதா என்று பார்க்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் கூறுகையில்;
மக்களின் காணிகளை இவ்வருடம் டிசம்பர் மாதத்துக்குள் கையளித்துவிடவேண்டும்
என்று காலநிர்ணயம் விதித்து வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலில் வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை அரசியலமைப்புக்கு உட்பட்டதா? அல்லது அதனை மீறுகின்றதா? என்பதனை ஆராய்ந்துபார்க்கவேண்டும்.
வட மாகாண சபையானது இதற்கு முன்னர் நாட்டின் அரசியலமைப்புக்கு எதிராக அரசியலமைப்பை மீறி பிரேரணைகளை நிறைவேற்றியுள்ளது. அந்தவகையில் இம்முறை நிறைவேற்றியுள்ள பிரேரணைகளும் அரசியலமைப்புக்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கும் முரணானதா என்று பார்க்கவேண்டும். இவை அரசியலமைப்புக்கு உட்பட்டு இருக்காது என்றே நான் கருதுகின்றேன்.
இதேவேளை வருட இறுதிக்குள் காணிகளை மீள கையளிக்கவேண்டும் என்பது தொடர்பில் காலநிர்ணயம் விதித்து பிரேரணை நிறைவேற்றியுள்ளனர். ஆனால் இந்த இடத்தில் ஒரு விடயத்தைக் திட்டவட்டமாக கூறுகின்றோம். அதாவது தனியார் காணிகளோ அரச காணிகளோ தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய அக்கறை என்று வரும்போது அங்கு விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்பதனை மிகவும் தெளிவாக குறிப்பிடுகின்றோம் என்றார்.

0 comments :
Post a Comment