மின்னல் ரங்காவின் நக்கலும் சுய நலத்திற்காக உருவாக்கப்பட்ட புது மொழியும்

”இடிக்கிறது பள்ளிவாயிகளாக இருந்தாலும் கிடைக்கிறது நல்ல கெபினட்டா (cabinet) ஆக இருக்கட்டும்:
என்பது Sri Ranga வினால் மின்னல் நிகழ்ச்சியில் உருவாக்கப்பட்ட பழ மொழியாம்!!!


இது பழ மொழியல்ல ரங்காவின் சுய நலத்திற்காக உருவாக்கப்பட்ட புது மொழி........................

(19.10.2014) ஆம் திகதி மின்னல் நிகழ்ச்சியில் பல முறை ரங்காவினால் இந்தப் புது மொழி கூறப்பட்ட போதும். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறுக் இதற்கு எந்த வித மறுப்பும் தெரிவிக்காமல் சின்ன பிள்ளை தனமாக பதில்களை அளித்தார் சமூகத்தின் பிரச்சினை பற்றி பேச கேள்விகள் கேட்க மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்க உருவாக்கப்பட்ட நிகழ்வில் இப்படி ஒரு பித்தலாட்டமா..? என்று மிகவும் கவலையளிக்கின்றது!

மின்னல் ரங்காவிடம் ஒரு கேள்ளி....

தம்புள்ளையில் இருந்து பதுளை வரைக்கும் பள்ளி உடைத்தலின் பின் யாராவது அமைச்சுப் பதவிகளை பெற்றிருக்கிறார்களா ?

பள்ளிகளை உடைத்தலுக்கு பரிகாரமா நீங்கள் எங்களுக்கு அமைச்சுப் பதவிகளை தாருங்கள் என்று யாராவது கேட்டிருக்கிறார்களா?

அதற்கான ஆதாரங்கள் உன்டா?

வடகிழக்கில் வந்து பாருங்கள் கடந்துவந்த அழிவுகளின் 500 மேற்பட்ட பள்ளிவாசல்களை எங்கள் முஸ்லிம் தலைமைகள் புணர்நிர்மானம் செய்து தந்தமை பற்றி நீங்கள் அறியாமல் இருப்பது மின்னல் நடாத்தும் உங்களின் அறியாமையா. அல்லது அறிந்தும் அமைதியா..?

முஸ்லிம் தலைமைகளை பற்றியும் முஸ்லிம் சமூகத்தைப் பற்றியும் விமர்சிக்க யாரும் பணம் தந்து விட்டிருக்கிறார்களா?

மின்னல் ரங்கா முஸ்லிம் அரசியலை கொச்சைப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றார்!

இவர் செய்வது சரியா?

நடப்பது நடக்கட்டும்ம் என்றிருக்க முடியாது இவைகள் களையப்பட வேண்டும் அல்லது முஸ்லிம் அரசியல்வாதிகள் மின்னலுக்குச் செல்லாமல் இருக்க வேண்டும்.
எனவே இணையத்தளங்கள் இதனை கெளரவம், சுயநலம் பாராது பொதுநலம் பார்த்து இதனை பிரசுரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 
புத்தளத்தில் இருந்து மக்கள் தொண்டன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :