கல்கமுவ – வெடகுலுவாகம பிரதேசத்தில், இரண்டரைக் கோடி ரூபாவை அதிஷ்டலாபச் சீட்டின் மூலம் வெற்றி கொண்ட 38 வயதான ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று இரவு 10.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இது கொலையா தற்கொலை என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவருக்கு அதிஷ்டலாபச் சீட்டின் மூலம் பணம் கிடைத்த பின்னர் தினமும் மதுபானம் அருந்துவதாகவும் ஒரு பிள்ளைகளின் தந்தையான இவரை மனைவி விட்டுச் சென்று விட்டதாகவும் எமது செய்தியாளர் கூறியுள்ளார்.
இவர் நேற்றையதினம் நண்பர்கள் சிலருடன் மதுபானம் அருந்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதுஎவ்வாறு இருப்பினும் இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
<tamilnewsnet>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment