ஜனாதிபதி தேர்தல் ஜனவரியில் நடத்தப்படும் என்ற உத்தியோகபூர்வ மற்ற அறிவி த்தல் பரவத் தொடங்கியதன் பின்னால் இல ங்கை அரசியலில் ஏற்பட்டுக் கொண்டிருக் கும் பதற்ற நிலைகள், ஆருடங்கள், விமர்சன ங்கள் கதைப்புக்கள் மேற்படி தேர்தலை களைகட்ட வைத்துள்ளதாகவே உணர முடிகிறது.
இந்த தேர்தல் பற்றி தேசிய கட்சிகள் வகு க்கும் வியூகம் சிறுபான்மைக் கட்சிகள் கொள் ளும் ஆவேசம் இங்குமில்லாமல் அங்குமி ல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நடுநி லைக் கட்சிகள் என எல்லா முனைகளாலும் கூர்மைப்பட்டுப் போயிருக்கும் ஒரு தேர்தலாக 7ஆவது ஜனாதிபதித் தேர்தல் பார்க்கப்படுகிறது.
தேசியக்கட்சிகளைப் பொறுத்தவரை அவை அடைந்திருக்கும் பதற்ற நிலைகள் அதே போன்று சிறுபான்மைக் கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கும் சவால் நிலைகள் இவை தவிர்ந்த உதிரிக்கட்சிகளின் மதில் மேல் தன்மையெல்லாம் ஒன்று சேர்ந்த திருவிழாவாக இலங்கை ஜனாதிபதித் தேர்தல் ஆகிக் கொண்டிருக்கின்றதென்றே சொல்ல வேண்டும்.
முதலில் தேசியக்கட்சிகளின் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய போக்குகள் எவ்வாறான வகிநிலை பெற்றிருக்கின்றது என்பதை நோக்குவோமானால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பொறுத்த வரை அதற்குள்ள ஒரேயொரு சவாலாக இருந்த விடயம் தற்போதைய ஜனாதிபதி மூன்றாம் முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா? என்ற சட்டரீதியான பிரச்சினையாகும். இது தவிர, இக்கட்சிக்குள் வேறொரு போட்டி தன்மையும் எழுவதற்கு சந்தர்ப்பம் உருவாகவில்லையென்பது வெளிப்படையான உண்மை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவைப் பொறு த்தவரை 18 ஆவது திருத்தச்சட்டம் பாராளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காலத்திலிருந்தே அவர் போட்டியிடுவார் என்பது உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாகும், எழக்கூடிய பிரச்சினையாக இருந்தது மூன்றாம் முறை அவர் போட்டியிட முடியுமா என்பதா கும். அந்த சந்தேகங் கூட தற்பொழுது சட்ட ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒரு விடயமாகி விட்டது. எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ மூன்றாம் தடவையாகவும் போட்டியிடுவதில் அரசியலமைப்பில் எவ்விதமான சட்ட சிக்கலுமில்லை. கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் 18 ஆம் திருத்தச் சட்டம் நிறை வேற்றப்பட்டது. அந்த திருத்த சட்டத்தின் ஊடாக அரசியலமைப்பின் 31 ஆவது ஷரத்தின் 2 ஆம் பிரிவு நீக்கப்பட்டதன் காரணமாக ஒருவர் எத்தனை தடவையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என சிரேஷ்ட சட்டத்தரணிகளான நிஹால் ஜயமான்ன மற்றும் கோமின் தயாசிறி ஆகிய இருவரும் அண்மையில் தெளிவுபடுத்தியிருந்தார்கள். இவ்வாறானதொரு விளக்கத்தை இலங்கையின் உச்ச நீதிமன்றமும் ஆலோசனையாக வழங்கியிருந்ததாக பத்திரிகை செய்திகள் தெரிவித்திருந்தன. எனவே, தற்போதைய ஜனாதிபதியின் மூன்றாம் முறைக்கான போட்டியிடல் உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றது. ஆனால், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு உள்ள முக்கியமான சவாலாக பார்க்கப்படும் விடயம் யாதெனில் எதிரணியில் யார் களமிறக்கப்படப் போகிறார்கள் என்ற விவகாரமாகும்.
பிரதான எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினை கள் சவால்கள், சங்கடங்கள் ஒன்றுக்கு மேற்ப ட்ட தாகவே இன்றைய சூழ்நிலையில் காண ப்படுகிறது. இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தக்கூடிய தனிமனித ஆளுமை மிக்கவரை தேர்ந்தெடுப்பதில் ஒரு தெளிவற்ற தளம்பல் நிலை கொண்டதாகவே காணப்படுவதையே உணரக்கூடியதாகவுள்ளது. கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவை நிறுத்துவது வெற்றியின் சாதக நிலையை உருவாக்குமா அல்லது பிரதான எதிர்க்கட்சி அணிகளை ஒன்றிணைத்து ரணில் விக்கிரமசிங்கவை பொது வேட்பாளராக நிறுத்த முடியுமா இல்லை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை நிறுத்துவது பொருத்தமாகுமா? அல்லது இது தவி ர்ந்த வேறு ஒருவரை நிறுத்த முடியுமா? என்ப தெல்லாம் இன்று ஆராயப்பட்டு வரும் விடய மாகும்.
இதில் ரணில் விக்கிரமசிங்கவை கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாராக நிறுத்த வேண்டுமென கட்சியின் மூத்த உறுப்பினர்க ளும் முன்னாள் சிரேஷ்ட அமைச்சர்களும் ஆர்வம் காட்டி வருகின்ற போதும் அக்கட்சி யின் பிக்கு முன்னணி ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் தலைமை த்துவ சபையின் தலைவர் கரு ஜெயசூரியவை வேட்பாளராக நிறுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை போட்டியிட வைக்க வேண்டாமென்றும் பொதுவேட்பாளரை களம் இறக்குமாறு முன் னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தன்னை சந்தித்த ரணிலுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அது மட்டுமன்றி ரணில் விக்கிரம சிங்கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகிய இருவரும் அண்மையில் ஜனாதிபதி தேர்தல் குறித்து லண்டனில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தனர் என்பதும் தெரிய வரும் விடயமாகும். எனவேதான் இத்தேர்தல் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலமுக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வரு வதை நாளாந்தம் அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.
எது எப்படியிருந்தபோதும் எதிர்த்தரப்பின ரைப் பொறுத்தவரை ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படவில்லை. எடுக்கப்பட முடியாத ஒரு தளம்பல் நிலையொன்று காணப்படுகின்றது என்பதே எதிர்க்கட்சிகளின் இன் றைய நிலையாக காணப்படுகிறது. பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து இதுவரை உடன்பாடு காணப்படவில்லையாயினும் ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ரணிலுடன் பேச்சுவார் த்தை நடத்த எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொது வேட்பாளர் ஒருவரை களமிறக் குங்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கூறிய ஆலோசனை கருவை வேட்பா ளராக நியமிக்குமாறு பிக்கு முன்னணி விடுத்திருக்கும் கோரிக்கை பொது வேட்பாளர் குறித்து ஜே.வி.பி., த.தே. கூட்ட மைப்பு ரணிலுடன் பேசவுள்ள அடிப்படை பிரச்சினைகளை நாம் ஒப்பிட்டுப் பார்ப்போமானால் ஒருமறைமுகமான உண்மை புலப்படுத்தப்படுகிறது. அதுயாதெனில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் சார்பில் மூன்றாம் முறையும் களம் இறங்கி இருக்கின்ற மஹிந்த ராஜபக் ஷவுக்கு நேர் ஒத்த ஒரு போட்டியாளராக ரணில் ஈடுகொடுக்க முடியாதவராக கருதப்படுகிறார் என்ற எண்ணப்பாடே மறைமுகமான உண்மையாக தெரியப்படுத்தப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்கவின் சிரேஷ்ட தன்மை கட்சியை நெறிப்படுத்த உதவினாலும் இன்றைய சூழ்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆளுமை, செல்வாக்கு, சுதாகரிப்பு எல்லாவற்றையும் தோற்கடித்து வெற்றி கொள்ளக்கூடிய ஒருவராக அவர் கட்சியின் உள்ளேயும் சரி வெளியேயும் சரி பார்க்கப்படவில்லையென்பதே உண்மையாக இருக்கிறது.
எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை அவர்களின் இன்றைய தேவையாக இருக்கின்ற ஒரேயொரு பிரதான இலக்கு ஆளும் அரசா ங்கத்தை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்பதாகும். இதை செய்யக்கூடிய வல்லமையும் ஆளுமையும் உள்ள வர்கள் யார் என்பதே இன்று எதிர்க்கட்சிகளு க்கு எழுந்துள்ள சவாலாகவுள்ளது. தனக்கு மூக்குப்போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனப்பிழையாக இருக்கட்டும் என்பதே இல ங்கையின் எதிர்க்கட்சிகளின் போராட்டமாக இருக்கிறது. பௌத்த தேசிய வாதம் சிங்கள தேசிய வாதம் ஆகியவற்றை அரசியல் சந்தையில் விற்க முனையும் ஆளும் கட்சியை தோற்கடிக்கும் உபாயத்தை தேடி எதிர்த்தரப்பினர் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையையே இந்தப் பொது வேட்பாளர் விவகாரம் விளக்கி நிற்கிறது. இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை தனது உறுதிப்பாட்டில் தளராத கம்பீர நிலை கொண்டதாகவே அது காணப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ நிச்சயம் வெற்றியீட்டு வார். வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் என அனைத்து பகுதியிலிருந்தும் அவருக்கு அமோக ஆதரவு கிடைக்கும். இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவே என அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட வர்களாக அரசாங்க தரப்பினர் இருந்து வரு கிறார்கள். அதுமட்டுமன்றி பங்காளிக்கட்சி களாக இருந்து கொண்டிருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஹெல உறுமய தொட ர்ந்து ஆதரவு நல்குமென எதிர்பார்க்கப்படு கின்றது. இதனை முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஹசன் அலி நாசூக்காக, பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். மஹிந்த ராஜபக் ஷ மூன்றாவது தடவை போட்டியிடு வதில் நாட்டிற்கோ அல்லது எதிர்க்கட்சிகளு க்கோ தாக்கம் எதுவும் ஏற்படப்போவதில்லையென கூறியிருப்பதுடன் ஹெல உறுமயவும் அரசாங்கத்தைப் பலப்படுத்த வேண்டிய தேவையுள்ளது எனக்கூறிக் கொண்டிருக்கின் றது.
ஆளும் அரசாங்கத்தைப் பொறுத்தவரை பின்வரும் பின்னணிகள் அதற்கு பலம் ஈட்டு மென அதிகமாக நம்புகின்றார்கள். ஒன்று யுத்த வெற்றி, இன்னொன்று பௌத்த சிங்கள தேசிய வாதம். மற்றொன்று சர்வதேச விசாரணையின் நெருக்கடி நிலை. இதில் இரண்டாவது விடயமான பௌத்த சிங்கள தேசியவாதம் மிகத்தீவிரமாக தீட்டிவிடப்படுவதை அண்மைக்காலத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் நிரூபிப்பதாகவுள்ளன. பொதுபலசேனா போன்ற அடிப்படைவாத அமைப்புக்கள் இதன் பின்னணியில் செயற்பட்டு வருவதும் அறியப்பட்ட விடயமாகும். இதனு டன் மற்றொன்றாகக் கருதப்படும் சர்வதேச விசாரணையென்ற பொறியை தனக்கு சாதகமாக்கி இலங்கையரசாங்கம் ஜனாதிபதி தேர்த லிலும் பொதுத்தேர்தலிலும் வெற்றியைத் தேடிக்கொள்ளும் சாத்திய நிலையொன்று காணப்படுகின்றது என்ற கருத்து பொதுவாகவே எல்லா மட்டங்களிலும் பேசப்பட்டு வரும் பொதுக்கருத்தாகக் காணப்படுகின்றது.
இது இவ்வாறு இருக்கும் நிலையில், ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக சிறுபான்மைச் சமூகத்தைப் பிரதிபலிக்கின்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், அ.இ.மு. காங்கிரஸ் என்பவை மற்றும் மலையக கட்சிகள் உதிரிக்கட்சிகளின் நிலைப்பாடு சார்ந்த விடயங்கள் ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை இம்முறை புதிய அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டிய தேவையில் உள்ளன என்பதே யதார்த்தம்.
அண்மையில் ஜனாதிபதி தேர்தல் பற்றி கருத்தொன்றை வெளியிட்டிருந்த மாதுலுவாவே சோபித தேரர் பின்வருமாறு கூறியி ருந்தார். நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம் வாக்குகளே யார் ஜனாதிபதி என்பதை தீர்மானிக்கும். அனைத்து கட்சிகளும் இன்றைய ஜனாதிபதிக்கெதிராக ஒன்றிணைய வேண்டுமென்ற கருத்தை வலியுறுத்தியிருந்தார். இதில் கூறப்பட்ட சோபித தேரரின் கருத்து உண்மையாக இருக்கலாம். அல்லது உண் மைக்கு மாற்று வடிவம் கொடுக்கலாம். இன் றைய சூழ்நிலையில் சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் நிலைப்பாடுகள் அல்லது முடிவுகள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது பொதுவாகவே எதிர்பார்க்கப்படுகின்ற விடயமாகும். ஆட்சி மாற்றமொன்றைக்கொண்டு வருவதன் மூலமே சிறுபான்மை சமூகத்தின் இருப்புக்களை தக்கவைக்க முடியுமென்ற இறுதி நம்பிக்கைக்கு சிறுபான்மை கட்சிகள் வந்திருக்கும் நிலையில் தமிழ் மக்களின் போக்கை நிர்ணயிக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளைத் தாங்கி நிற்கும் முஸ்லிம் காங்கிரஸும் எடுக்கப்போகின்ற முடிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்க போகின்றது. தமிழ் தேசியக்கூட்டமைப்பை பொறுத்தவரை ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையை ஆதரிப்பதா இல்லை பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில் உடன்பாடு காண்பதா? அதுவுமன்றி எப்போக்கு க்கும் இழுபடாமல் நடுநிலை வகிப்பதா என்ற சமமற்ற நிலையில் இருந்து கொண்டி ருப்பதாக தெரிய வருகின்றது. 2010ம் ஆண்டு நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பு எடுத்த முடிவுகள் பிற்காலத்தில் கடுமையாக விமர்சி க்கப்பட்ட போக்கு காணப்பட்டது என்பதும் உண்மையே.
இவ்வாறான அனுபவங்களின் அடிப்படை யில் பார்க்கின்றபோது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதித்தேர்தல் சார்பாக எதிர்காலத்தில் எடுக்கப்போகின்ற தீர்மானங்கள் வரலாற்றுப் போக்கை மாற்றக்கூடிய தீர்மானமாக இருக்க வேண்டுமென்பதே எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகின்ற விடயமாகும். இந்த தீர்மானத்தில் சறுக்கல் நிலையொன்று காணப்படுமானால் இன் னும் மக்கள் அவல ங்களையும் அட்டூழிய ங்களையும் தாங்கிக் கொள்ள முடியாத அவலநிலையொன்றே உருவாகும் என்பது தெளிவாகத் தெரியும் உண்மை.
இதேவேளை, இன்னுமொரு பக்கம் ஸ்ரீல ங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு சார்ந்த விடயமும் எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகின்ற ஒன்றாகும். 18 ஆம் சட் டச் சீர்த்திருத்தத்தை அன்று ஆவலுடன் ஆதரித்த முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு ஆதரவு நல்கும் என்ற ஒரு அபிப்பிராயமும் அண்மைக்காலத்தில் கட் டவிழ்த்துவிட்ட இனத்துவ முரண் நடவ டிக்கைகள் முஸ்லிம் சமூகத்தை அதிக ளவு பாதித்திரு க்கும் நிலையில் புதிய போக்கொன்றை இலங்கை வாழ் முஸ்லி ம்கள் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கு ஆயுதமாக ஜனாதிபதி தேர்தலைப் பயன்படுத்த வேண்டுமென்று அபிப்பிராயப்ப டும் புத்திஜீவி சமூகமொன்று முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்து கொண்டிருக்கும் நிலையில் அக்கட்சி எப்படிப்பட்ட தீர்மா னத்தை எடுக்கப்போகின்றது என்பது பற்றி ஒன்றுக்கொன்று பலவாறான அபிப்பி ரா யங்கள் கூறப்படுகின்றன.
மூன்றாவது முறையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ போட்டியிடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு என்ற செய்தியும் மூன்றாவது முறையாக வரப்படும் நிலையில் சிறுபான்மைச் சமூகத்துக்கு எழக்கூடிய கெடுதி நிலைகள் பற்றி மூத்த தலைவர்கள் கூறிவரும் கருத்தும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்ற போதும் மிக நிதானமாகவும் கவனமாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப்பீடம் ஆராய்ந்து வருகின்றது என்பது தெரியப்ப டுகின்ற ஒரு விடயமாகும். எது எப்படியி ருந்தபோதிலும் எதிர்வரும் ஜனhதிபதி தேர்தலில் தீர்மானிக்கும் சக்திகளாக சிறு பான்மைக்கட்சிகள் இருக்க முடியுமா என்பது இப்போதைய சூழ்நிலையில் கனத்த கேள் வி யாகவே இருக்கின்றது. யாரை ஆதரிப்பது என்பது பற்றி இன்னும் முஸ்லிம் காங் கிரஸ் முடிவு எடுக்கவில்லை. முதலில் பாராளுமன்ற தேர்தலே வேண்டு மென முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமை ச்சருமான ரவூப் ஹக்கீம் கூறிக் கொண்டிரு க்கின்றார். இதேநேரம் இனப் பிர ச்சினைக்கு உருப்படியான தீர்வை முன் வைக்கும் வேட் பாளரையே ஆதரிப்போம் என தமிழ் தேசிய க்கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச் சந்திரன் கூறியுள்ளார்.
இவையெல்லாவற்றையும் முறியடிக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்குமாறு இடதுசாரி அமைச்சர்கள் புதிய யோசனை யொன்றை முன்வைத்துள்ளார்கள். இவை யெல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க் கின்ற போது 7 ஆவது ஜனாதிபதி தேர்தல் என்பது இலங்கை அரசியல் களத்தில் சிறுபான்மை சமூகத்தின் பலத்தை தீர்மானிக்கும் தேர் தலாக அமையப்போகிறதா அல்லது பௌத்த சிங்கள தேசிய வாதத்தின் பல த்தை நிரூபிக்கும் தேர்தலாக அமையப் போகின்றதா என்பது பற்றி தீர்மானிக்க முடி யாத நிலையே உரு வாகியிருக்கின்றது.
நன்றி- வீரகேசரி நவம்

0 comments :
Post a Comment