முஸ்லிம் காங்கிரஸ் "கேம்" கொழும்பில் பரவலாக சுவரொட்டி! - படங்கள்

அஸ்ரப் ஏ சமத்-

நான் இன்று காலை எனது வீட்டில் இருந்து கொழும்பு மருதானைக்குச் சென்று கொண்டிருந்தபோது கொழும்பில் உள்ள எல்லா இடங்களிலும் ; பொது இடங்களில் பாரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. புதிதாக வாரயிருதியில் வெளிவரும' தேசிய' என்ற சிங்கள பத்திரிகை வாங்குங்கள் அதன் தலைப்புச் செய்தி ஆண்டுவ பிரலண்ட முஸ்லீம் காங்கிரஸ் திட்டம்' (அரசை கவிழ்க்க முஸ்லீம் காங்கிரஸ் திட்டம்) என்றும் அதில் அமைச்சர் ரவுப் ஹக்கீமீன் பெரிய படம் ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. கொழும்பு மருதாணை, வெள்ளவத்தை காலிவீதி டவுன்கோல் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான போஸ்டர்கள் தேசிய பத்திரிகையினால் ஒட்டப்பட்டுள்ளது.

அதன் பின் பத்திரிகைக்கடைக்குச் சென்று தேசிய பத்திரிகையை படித்தேன் அதில் ' ஜனாதிபதி தேர்தலுக்கு முன் தமிழ்த் தேசிய முன்னணியிடம் இணைந்து ஒப்பந்தம் கைச்சாhத்திட்டு கிழக்குமாகாணசபையை கவிழ்க்கத் திட்டம் வகுத்துள்ளதாகவும். தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்குமாகணசபை முதலமைச்சர் பதவியை முஸ்லீம் காங்கிரஸூக்கு வழங்குவதாக அரசு தெரிவித்தும் அதனை வழங்கவில்லை. அதனால் தமிழ்த்தேசிய முன்ணனி ஜ.தே.கட்சியை இணைத்து கிழக்குமாகாணசபையை கைப்பற்றுவதற்கு திட்டம் ;தீட்டியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று 'ரன்தீவ' எனும் பத்திரிகையில் - நளீன் திசாநாயக்க தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகி ஜ.தே.கட்சியில் இணைவார் என தலைப்புச் செய்தி வெளியீட்டுள்ளது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :